Category Archives: Uncategorized

லெ கிளேஸியொவின் ‘குற்ற விசாரணை’யில் நுண்பொருள் கோட்பாட்டியல்

 

முனைவர் நா. ஜிதேந்திதிரன்,

தமிழ் உதவிப் பேராசிரியர்,

 சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி,

திருநெல்வேலி – 627 011.

 

குற்றவிசாரணைலெ கிளேஸியொ (J.M.G. Le Clèzio) பிரெஞ்சு எழுத்தாளர், கல்லூரிப் பேராசிரியர்.2008-இல் அவரது ஒட்டுமொத்த படைப்புகளுக்காக நோபல் பரிசு பெற்றவர். 23 வயதில் அவர் எழுதிய முதல் நாவல் குற்ற விசாரணை. 1940-இல் பிறந்த லெ கிளேஸியொ, தற்போது பிரான்ஸிலே இருக்கிறார். பூர்வீகம் மொரீஷியஸ். பிரெஞ்சுக் குடியுரிமை, மொரீஷீயஸ் குடியுரிமை என இரட்டைக் குடியுரிமை பெற்றவர். நுண்பொருள் கோட்பாட்டியலைப் பயன்படுத்தி எவ்வாறு ஒரு புனைவைச் செய்துள்ளார் என்பதை விளக்குவது இக்கட்டுரையின் நோக்கம்.

 

குற்ற விசாரணை நாவல் பிரெஞ்சு மொழியில் ‘Le Procès-verbal’ என்ற தலைப்பிலும், ஆங்கிலத்தில் ‘The Interrogation’ என்ற தலைப்பிலும் வெளிவந்தது. இதனைப் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் நாகரத்தினம் கிருஷ்ணா.

 

குற்ற விசாரணை நாவல் ஒரு சுவாரஸ்யமான நாவல், வித்தியாசமான நாவல்.சுவாரஸ்யம் ஏனெனில், இதில் கதை என்று எதுவும் கிடையாது. 250 பக்க நாவல். இது தரக்கூடிய அனுபவம்தான் சுவாரஸ்யம். இதனுடைய மொழிநடைதான் வித்தியாசம். இந்த நாவலை நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் தொடங்கலாம். அதனால் எந்தக் குழப்பமும் ஏற்படாது. 4ஆவது அத்தியாயத்திலே தொடங்கலாம். அங்கிருந்து 7 அல்லது 10 அல்லது நீங்கள் விரும்புகிற எந்த அத்தியாயத்திற்கும் செல்லலாம் – கடைசி அத்தியாயத்தைத் தவிர. கடைசி அத்தியாயத்தில்தான் முந்தைய அத்தியாயங்களில் ஏற்படுகிற சிறுசிறு அயர்ச்சிகளுக்கு ஓரளவு புரிதல் கிடைக்கிறது. மொத்தம் 17 அத்தியாயங்கள். அத்தியாயங்களை மாற்றி மாற்றிப் படித்தாலும், பெரிய வித்தியாசம்ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஏனெனில் ஒவ்வொரு அத்தியாயமும் தனித்த ஒரு அனுபவத்தைத் தரும். குறிப்பிட்ட ஒரு மனிதனைப் பற்றிய கதையாக இல்லை. குறிப்பிட்ட காலத்தைப் பற்றியதாகவோ, குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றியதாகவோ இந்தக் கதை இல்லை. இதில் கதையே இல்லை என்பதுதான் உண்மை. இது ஒரு உரையாடல். வாசகனோடு நிகழ்த்தக்கூடிய உரையாடல். 23 வயதில் இவ்வளவு நுட்பங்களோடு ஒரு நாவலைப் படைக்க இயலுகிறது என்பது ஆச்சரியமளிக்கக் கூடியதாக இருக்கிறது.அவரைப் பற்றிய குறிப்புரையில், “வெளிச்சத்திலிருந்து இருட்டுக்குள் கால்வைத்து  நடப்பதையொத்த அனுபவத்திற்குக் கைகாட்டுபவர் கிளேசியொ” என்பதும், பின்னட்டைக் குறிப்புரையில், “1963-இல் கிளேசியொவின் முதல் நாவல் ‘குற்ற விசாரணை’ வெளிவந்தபோது, பிரெஞ்சு இலக்கிய உலகம் அவரது மொழி கண்டு விக்கித்தது” என்ற சொல்லாடல்களும் அவரது ஆளுமையை; எழுத்தாற்றறலை வெளிப்படுத்தும்.

 

விசாரணை – கேள்வி கேட்டல். வாழ்வின் மீதான சில கேள்விகளை முன்வைக்கிறது.  நாவல் உளவியலா? தத்துவமா? இலக்கியமா? வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றியதா? அல்லது பிரச்சிசனைகள் இருப்பதாக நம்பும் மனதைப்பற்றியதா? கடவுள் மறுப்பா? கடவுள் இருப்பா? இறைநிலை பற்றியதா? எப்படி வாழ்வது? என்னுடைய வாழ்முறை சரியா? அல்லது உங்களுடையது? அல்லது அவருடையது? அல்லது இவையெல்லாம் கொண்டதா? அதுதான் இந்நாவல். ஒருவருடைய பேச்சு, செயல், வாழ்வு மற்றவருடைய பார்வையில் குற்றம், இவர் பார்வையில் மற்றவருடைய வாழ்வும் செயலும், பேச்சும் குற்றம். அவ்வளவுதான் குற்ற விசாரணை என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லிவிட முடியாது.

 

எந்த இடத்தில் அவன் குற்றம் செய்தான் என்பதும், அவன் செய்தக் குற்றம் ஏற்கனவே சிலுவைக் கடவுள் செய்த செயல்போலத்தான் எனில், சிலுவைக் கடவுளின் செயலே குற்ற விசாரணை.

 

குற்ற விசாரணை மனநலம் சார்ந்த பிரச்சிசனைகளை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. கதைநாயகன் புத்திபேதலித்தவனா அல்லது புத்திசாலியா என்ற மயக்கத்தைத் தருகிறது. ஒரு தனிமனிதனைப் பற்றிய கதை அல்ல. எல்லா மனிதர்களுக்கும் பொதுவான விஷயம். அதனால்தான், முதல் மனிதனான ‘ஆதாம்’ என்ற பெயரைக் கதைநாயகனுக்கு இட்டிருக்கிறார். இந்த நாவல் அறிவியலா? புனைவா? என்ற தடுமாற்றமும் ஏற்படுவது இயற்கை. உலகம் அறிவியலால் ஆனது. இயற்பியல்,வேதியியல், தாவரவியல், விலங்கியல ;… முக்கியமாக, கணிதவியல். இந்த அறிவியலன்றி, மனிதனால் வாழ இயலுமா? இயலாது.  அறிவியலும், தத்துவமும், உளவியலும்,  புனைவும் கலந்தது இந்நாவல்.

 

பருப்பொருளிலிருந்து நுண்பொருளுக்கு நகர்தல் இந்நாவலில் விரிவாக விளக்கப்படுகிறது. நுண்பொருளை நோக்குதல் – நுண்பொருளை உணர்தல் – நுண்பொருள் உலகத்தில் நுழைதல் என்பதன்படி நாவல் நகர்கிறது. ஆதாம் போலோவின் நகர்வை இப்படித்தான் புரிந்துகொள்ள முடியும். நுண்பொருளைப் பற்றிய ஆய்வு நுண்பொருள் கோட்பாட்டியல்,(Metaphysics). உலகம் பருப்பொருள்களால் ஆனது. பருப்பொருள்கள் நுண்பொருள்களால் ஆனது. கண்ணுக்குப் புலப்படுகிற, வடிவம் தெரிகிற பருப்பொருள்கள் சிதைவை அல்லது பகுப்பை விளக்குவது நுண்பொருள் கோட்பாடு. இந்தப் பிரபஞ்சம் எண்ணிலடங்கா நுண்பொருள்களால் ஆனது. கண்ணுக்குப் புலப்படாத, வடிவமற்ற மனதில் பருப்பொருள் நுண்பொருள்களாக மாற்றம் பெறுவதை; மனம் நுண்பொருளாகத் தன்னை உணர்வதை; மனம் நுண்பொருள் உலகத்தில் நுழைவதை நுண்பொருள்பித்து (Micromania) எனலாம்.

 

மேற்குறிப்பிட்ட நுண்பொருள் நிலையை மனம் விழிப்புணர்வோடு அடைவதை இந்தியத் தத்துவத்தில் சித்துநிலையில் அணிமா, லகிமா, கரிமா என்பர். அணிமா –சிறிய வடிவம் அடைதல், லகிமா – காற்றைப் போல இலகுவாதல், கரிமா – மலை, பாறை போன்று கனமாதல். இந்த நிலையைத்தான் ஆதாம் போலோ அடைகிறான்.இந்நிலைகளை மனம் விழிப்புணர்வோடு அடைந்தால் அவன் ஞானி. மனச்சமநிலை தடுமாறி அடைந்தால் நுண்பொருள்பித்து; மனச்சிதைவு நோய். ஆதாம் போலோ இரண்டு நிலைகளையும் மாறி மாறி அடைகிறான்.

 

“சிறு சிறு பிரச்சினைகளையெல்லாம் ஊதிப்பெருக்கி இவனது  சீவனைக் கொடிய பொருளாக, வேதனைகளின் மொத்த உருவமாகக் காண்பித்து, வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வென்பது அங்கே பருப்பொருள் குறித்த அச்சமின்றி வேறெதுவுமில்லையென்பதைப்போல அவதியுறும் தனது உடலின் ஒவ்வொரு உளப்பாட்டிற்;கும்…” (பக். 23, 24) என்று ஆதாம் வழியாக லெ கிளேஸியொ கூறுகிறார்.மனம் பருப்பொருளைக் குறித்தே எண்ணி அச்சமுறுகிறது. ஆகையினால், ஆதாம் “பருப்பொருளை, பருப்பொருளால், பருப்பொருள் சார்ந்த நியாயங்களால் ஜெயிக்க விரும்புகிறான்”(ப. 165). பருப்பொருளிலிருந்து நுண்பொருளுக்கு நகர்வதின்மூலம் அதைச் செய்ய முடியும். இத்தகைய நகர்வை, பின்தொடர்தல், ஓசைகளை உணர்தல், உடன் நிகழ்வுறுதல் நிலைகளில் அடையலாம்.

 

ஆதாம் முதலில் ஒரு பூங்காவிற்குள் நுழைகிறான். அங்கு முதலைகளைப் பார்க்கிறான். முதலைகளின் செயல்கள், அசைவுகள், உறுப்புகள் ஒவ்வொன்றையும் விரிவாக எண்ணிப் பார்க்கிறான். தொடர்ந்து பெண் சிங்கம், குரங்குகளைப் பார்க்கிறான். ஒவ்வொன்றைப் பற்றியும் அதேமாதிரி எண்ணிப் பார்க்கிறான். பிறகு, கடற்கரையில் ஒரு கறுப்பு நாயைப் பார்க்கிறான். செய்வதற்கு ஒன்றுமில்லை. எந்த இலக்குமற்று, எந்த நோக்கமுமற்று அதனைப் பின்தொடர விரும்புகிறான். கறுப்பு நாயின் செயல்பாடுகள், நகர்வுகளைக் கவனித்தபடி பின்தொடர்கிறான். உலகத்தைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல், யாரையும் பொருட்படுத்திக் கொள்ளாமல் கறுப்பு நாய்  செல்கிறது; மஞ்சசள்  நிறப் பெட்டை நாயோடு உறவு கொள்கிறது. இன்னும் சில மாதங்களில் அந்த  மஞ்சள் நாய் ; தகப்பன் பேர் தெரியாத அரை டஜன் குட்டிகளைப் போடும் என்றெண்ணிக் கொள்கிறான்.

 

ஆதாம் மலையில் யாருமற்ற, யாருடைய வீட்டிலேயோ தங்கியிருக்கிறான். அங்கு வெள்ளை எலியொன்றைப் பின்தொடர்கிறான். எலியை அடித்து விரட்டிக்கொன்று, பின்பக்கம் வீசுகிறான். தோட்டத்தில் அமரும்பொழுது, இரண்டு எறும்புகள்அவனமர்ந்ததால் நசுங்கிச் சாகின்றன. தோட்டத்தில் செரீஸ் மரங்கள் பனித்துளியின் வாலைப் பிடித ;திழுக்கின்றன. பேரிக்காய் பழங்கள் மரங்களிலிருந்து தப்பித்து ஓடுகின்றன. புற்கள் மூச்சுவிட முடியாமல் தவிக்கின்றன. இலைகளின் மீது சாம்பல் படிவதால், இலைகள் தங்கள ;மீது ரோமங்கள் முளைத்துவிட்டதாகப் புலம்புகின்றன. இவையத்தனையையும் ஆதாம் கேட்டும், பார்த்தும், கவனித்தபடியும் இருக்கிறான்.

 

ஆதாம் முதலையிலிருந்து தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக, மனதளவில் பின்தொடர்ந்து, புற்களில் வந்து நிற்கிறான். இறுதியில் சாம்பல், பாறைகள், மணல் போன்று ‘பின்தொடர்தல்’ நிகழ்கிறது. பாறையில் பாறையாக, மணலில் மணலாக, வாயைத் திறந்தபடி, மழைக்காகக் காத்திருக்கும் நிலம்போல படுத்திருக்கிறான். ஆதாம் மனதளவில் நுண்பொருளாக மாறிவிடுகிறான். இந்த நாவல் முழுக்க நுண்பொருள் நோக்கிய பயணமாக அமைகிறது. நுண்பொருளை உணர்த்தும் வகையில் அமைகிறது.Zoology யில் தொடங்கி Botany கடந்து Geography-க்கு வருகிறான். கோடுகளால் உருவாக்கப்பட்ட நாடுகள் (உலக வரைபடம்), சதுர அடிகள், திசைகள் என்று அனைத்தையும் விமர்சிக்கிறான். மனிதர்கள் உருவாக்கிய கோடுகள், மனிதர்கள் உருவாக்கிய நாடுகள், மனிதர்கள் உருவாக்கிய திசைகள் என்று அனைத்தும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை.

 

ஆதாம் தான் விரும்பும் மிஷெலின் அடிச்சுவடுகளைப் பின்தொடர்கிறான். அதனை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு…. என்று முப்பது வரை எழுத்தாலேயே லெ கிளேஸியொ அமைத்திருக்கிறார். ஆதாமினுடைய அசைவுகள் செ.மீ அளவிலும் கண்ணசைவுகள் மி.மீஅளவிலும்; நாவலிலும் குறிக்கப்படுகின்றன. அவன் தன் கையை 10செ.மீக்கு நகர்த்தினான் என்றவாறு அமைகிறது.

 

ஆதாம் நுண்ணோசைகளையும் பின்தொடர்கிறான். மரங்கள், பழங்கள், புற்களின் சிரிப்பையும், புலம்பலையும் பின்தொடர்கிறான். ஒரு சிகரெட் துண்டு கீழே விழும்போது, அது ஆயிரம் மடங்கு ஓசையை அவனுக்குள் ஏற்படுத்துகிறது. வெடிகுண்டுகளின் ஓசைகளையும் கேட்கிறான். மீன்களின் கூச்சலையும் கவனிக்கிறான். எவ்வளவு நுணுகிச்செல்ல முடியுமோ, அவ்வளவு நுணுகிச் செல்கிறான்.

 

லெ கிளேஸியோ இந்த உலகை மிக நுண்ணிய அளவீடுகளாலும், ஓசைகளாலும் கவனிக்கச் சொல்கிறார். இந்த நாவல் நுண்பொருளியலை மட்டுமல்லாது உளவியல், இருத்தலியல் கூறுகளையும் கொண்டிருக்கிறது. தவிர, மேலை இலக்கியங்களில் பொதுவாகக் காணப்படுகிற யுத்தம், போர் வெறுப்பு, அணுகுண்டுகள், சாவு பற்றியும், மதத்திற்கு (கிறிஸ்தவம்) எதிரான கருத்துக்களையும் இந்நாவலில் காணமுடிகிறது. ஆதாம் எங்கிருந்து தப்பி வந்திருக்கிறான் என்பதை அவனே மறந்திருக்கிறான். ராணுவத்திலிருந்தா? அல்லது மனநலக் காப்பகத்திலிருந்தா? என்று அவன் குழம்புகிறான். லே கிளேஸியொ ராணுவமும் மனநலக் காப்பகமும் ஒன்றுதான் என்கிறார். யுத்த வர்ணனை, பீரங்கிகள், இறப்பு விவரணை நாவலில் அதிகம். நீரில் மூழ்கி இறந்தவனைப் பற்றிய விவரணை லெ கிளேஸியோவினுடைய அவதானிப்பைச் சொல்கிறது.

 

கிறிஸ்தவத்திற்கு எதிரான கருத்துக்களை லெ கிளேஸியொ வெளிப்படையாகவே சொல்கிறார். தேவாலயம், கன்னித்தாய் குறித்த கருத்துக்கள் இடம்பெறுகின்றன. இயேசுவின் மலைப்பிரசங்கத்தை நினைவுபடுத்துவதாக குன்றிலிருந்து பேசும் ஆதாமின் உரை அமைந்திருக்கிறது. அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் 12பேர் என்கிற குறிப்பு இயேசுவின் சீடர்களைக் குறிக்கிறது. அந்த உரைக்குப் பிறகு, ஆதாம் மனநலக் காப்பபகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறான்.

 

ஆதாம் தனக்கு மனிதர்கள் மீது சலிப்பும், வெறுப்பும் ஏற்படுவதாகக் கூறுகிறான். அத்தனை பேரும் ஒரே அச்சில் வார்த்ததுபோல் ஒரே மாதிரியாக இருப்பது அவனுக்குச் சலிப்பைத் தருகிறது. இரண்டு வாய்கள், காது இருக்க வேண்டிய இடத்தில் கால் என்று உறுப்புகள் எதுவும் இடம் மாறாமல் ஒரே மாதிரி இருப்பதை வெறுக்கிறான். ஆதாமுக்குப் பேச்சின் மீதும் வெறுப்பு ஏற்படுகிறது. எல்லோரும் ஒரே விஷயத்தையே திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தனக்குப் பதிலாகப் பேச, கிளிக்குப் பயிற்சி கொடுத்து, தோளில் அமர்த்திக் கொள்ள விரும்புகிறான். ஆதாம் வழியாக லெ கிளேஸியொ வெளிப்படுத்தும் ‘மன அமைப்பை’ப் புரிந்து கொள்ள முடிகிறது.

 

‘உடன் நிகழ்வுறுதல்’ என்கிற தன்மையும் நாவலில் விளக்கப்படுகிறது. சிகரெட் பிடிக்கும்பொழுது, உலகில் எந்தெந்த இடங்களில் யாரெல்லாம் அதே நேரத்தில் சிகரெட் பிடிக்கிறார்களோ, அந்தச் செயலோடு, அவர்களால் கட்டமைக்கப்படுகிற உலகத்தில் தன்னை உணர்வது உடன் நிகழ்வுறுதல். இந்நிலையை அடைவது ஞான நிலை. ஓசைகளைக் கவனித்தல் ஞான நிலை. நுண்பொருளாகுதலும் ஞான நிலை. இந்நாவல் வாழ்வைப் பற்றிய தத்துவ விசாரணையை மேற்கொள்கிறது.

 

குற்ற விசாரணை நாவல் பின்தொடர்தல், ஓசைகளை உணர்தல், உடன் நிகழ்வுறுதல் என்கிற நிலைகளிலான நுண்பொருளியல் மட்டுமல்லாது உளவியல்,இருத்தலியல் உட்பட, வாழ்வைவைப் பற்றிய புரிதலை வாசகனுக்கு ஏற்படுத்துகிறது. மொழிநடையிலும், நாவல் கட்டமைப்பிலும் சிறிது வித்தியாசத்தைக் கொண்டிருக்கிறது. ஆதாம் எழுதும்  கடிதங்களில், அடித்து எழுதியிருப்பபதை, நாவலில் காட்சிவழி அடித்தே காட்டப்பட்டிருக்கிறது. பக்கங்கள் கிழிக்கப்பட்டிருப்பதை, இரண்டு பக்கங்கள் நாவலில் வெற்றிடமாக விடப்பட்டு, காட்சிவழி காட்டப்பட்டிருக்கிறது.

 

இதன் சிக்கலான மொழிநடையை இலகுவாக, புரிதலுக்கான மொழிநடையில் மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளனின் பணி சிறப்புக்குரியது. கொஞ்சம் பிசகினாலும் மனப்பிறழ்வுக்குள் தவறி விழும் வாய்ப்புள்ள பாத்திரத்தின் மனவோட்டங்களுக்கான சொற்கள். மனவோட்டங்கள் அத்தனைக் கவனத்தோடு மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. கற்பனைக்கு அப்பாற்பட்ட சங்கதிகளை மொழிபெயர்ப்பதும், சப்தங்கள், மன உலகச் சஞ்சாரிப்புகள் தொடர்பான சொற்களை மொழிபெயர்ப்பதும், லெ கிளேஸியொவின் (ஆதாம்போலோ) மன உலகத்திற்குள் பிரவேசித்தாலொழிய கனவை மொழிபெயர்ப்பது சவாலான விஷயம். லெ கிளேஸியொவின் மன உலகம் சாதாரணமானதல்ல. ஞானத்திற்கும், பித்து நிலைக்கும் நடுவிலான மையம். உளவியல் தொடர்பான செய்திகள் அதிகப் பிரக்ஞையோடு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பாளரின் மொழிவழியே நாம் ஆதாம் போலோவின் (லெ கிளேஸியொ) கண்களை அடைய முடிகிறது. ஆதாம் போலோவாகவே வாழ்ந்தால்தான் இம்மொழி சாத்தியம். தத்துவப் பழக்கமும், அறிவியல் புரிதலும், தேடல் மனமும் கொண்டிருந்தால் மட்டுமே இந்நாவல் களம் புரிபடும். அதனைச் செம்மையாகச் செய்திருக்கும் மொழிபெயர்ப்பாளர் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் பாராட்டுக்குரியவர்.

**************************************

மொழிவது சுகம் ஜனவரி 31: இராசேந்திர சோழன்

 

 

 

கடந்த ஜனவரி ஐந்து அன்று  பிரான்சிலிருந்து வந்தேன்.  ஒரு மாதம் வெகு எளிதாக ஓடிவிட்டது.  புதுச்சேரி நண்பர் சீனு தமிழ்மணி.   மூன்று மாதங்களுக்கு முன்பு   எழுத்தாளர் ராசேந்திர சோழன் குறித்து ஒரு தொகுப்பு கொண்டுவர இருப்பதாகவும்  அதற்கு  கட்டுரையொன்றை தரமுடியுமா எனவும் கேட்டார் அக்கட்டுரைக்காக அவருடைய சிறுகதைகளை மீள்  வாசிப்பு செய்தேன்.  எழுத்தாளரை சில வருடங்களுக்கு  முன்பு சந்தித்திருக்கிறேன்.

நான் அதிகம் எழுத்தாளர்களைச் சந்திப்பதில்லை.  பெயரைப்பார்த்து எழுத்தினுள் பிரவேசிக்கும் குணமுமில்லை.    ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சுமொழியில் பெயருக்கு முக்கியத்துவம் அளிக்காமல் எழுத்தை அணுக வாய்ப்புகள் இருக்கின்றன. இங்கு அத்தகைய வாய்ப்புகள் இல்லாததது ஒரு குறை. தமிழில் புதிதாக எழுதவருகிறவர்களின் எழுத்துக்களை மட்டுமே கடந்த சில ஆண்டுகளாக வாசிக்கிறேன். இளம்தலைமுறை எப்படி புனைவுகளை அணுகுகின்றது, என்பதைத்  தெரிந்துகொள்ள ஆசை.

எனது சந்திப்பை சுமையாகக் கருதாத நண்பர்களைப் பார்க்கிறேன், பழகுகிறேன். அவர்களில் ஒருவர் எழுத்தாளர்  இராசேந்திர சோழன். அவர் எழுத்தையையும், அவர் நிஜவாழ்க்கையையும் அறிந்தவர்களுக்கு  மக்கள் இலக்கியவாதி. அவருடைய சமூகப் பிரக்ஞை, அடித்தட்டு மக்களின் மீதான அக்கறை, அரசு எந்திரங்களால் பந்தாடப்படும் உயிர்கள் மீதுள்ள கரிசனமென நம்மை ஈர்க்கும் கணுக் கரும்புகள் அவரிடம் ஏராளம்…ஏராளம்.

ஒருவாரத்திற்கு முன்பு இரண்டாவது முறையாக அவரைச் சந்திக்க நேர்ந்தது, உபயம் இரண்டாவது முறையாக நண்பர் சீனுதமிழ்மணி. நண்பர்கள் பஞ்சு, தமிழ்மணி, நாயகர், பஞ்சுவின் மாணாக்கரும் நாயகரின் நண்பருமான பேராசிரியர் செல்வபெருமாள்  என ஐந்துபேரும் ஒரு பிற்பகல் வேளை அலுப்புடன் சாய்ந்திருந்த நேரத்தில் மயிலத்திற்குச் சென்றிருந்தோம். குறுகலான தெரு ; உழைப்பு, வியர்வை, சினிமா, அரசியல் சங்கேதச் சொற்களில் பல்லாங்குழி ஆடும் மக்கள்.

எங்களை எதிர்பார்த்ததுபோல எழுந்துவந்தார். ஆசனங்களைச் சுட்டிக்காட்டிவிட்டு, அவரும் எங்களுடன் அமர்ந்தார். எழுத்தாளன் தனிமை என்பது : எடைகற்களைத் தொலைத்த தராசு. ஒளியைத் துறந்த தீபம், புரை குத்தியும் உரையாதபால்.

அறிமுகம் சுருக்கமாக முடிந்தது. இலைமறைகாயாக முகத்தில் கண்சிமிட்டும் சந்தோஷம். மீசையில் விரைப்பு இல்லை. திறந்த விழிகளுக்குள் விலைமதிக்கமுடியாதக் கோமேதக் கற்கள். தனிமைக்குள் அடைபட்டுக்கிடந்த அறிவும் மொழியும்   எங்கள் சந்திப்புக்காக காத்திருந்தனபோலும்.  நண்பர் சீனு தமிழ்மணி எழுத்தாளர் பற்றிய தொகுப்பினைப்பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொள்ள, இன்றைய தலைமுறைக்கு நேற்றைய தமதெழுத்தினால் என்ன சொல்லமுடியும் என்பதைத் தெரிவிக்கும் வகையில் தொகுப்பு இருக்கவேண்டும் என்ற யோசனையைத் தெரிவித்த்தார்.  மயிலம், இளமைக்காலம், ஆசிரியப்பணி, மார்க்சிய அபிமானம் ஆகியவற்றைக் குறித்த    நண்பர்கள் பஞ்சு, சீனு தமிழ்மணி ஆகியோரின் வினாக்களுக்கு  ஒரு குழந்தையின் ஆர்வத்துடன தமது கடந்தகாலத்தை கொண்டார். அதை விவரிக்கிறபோது உதட்டசைவிற்க்கு ஏற்ப கட்டைவிரலுடன் கருத்துமோதலில் குதித்ததுபோல ஆள்காட்டிவிரல் அசைகிறது. கடந்தகாலத்தில் பயணிக்கிறபோது சந்தோஷ குளத்தில் முங்கிக் குளிப்பதை பரவசம் சொட்டும் விழிகளில் கண்டோம். பஞ்சுவும், தமிழ்மணியும் அளவளாவ அரைக்கண்மூடி தியானிப்பதுபோல நானும்,  நாயகரும் செல்வபெருமாளும் கேட்டு மகிழ்ந்தோம்.

——-

‘ரணகளம்’ : ‘துணை’யும் ‘இணை’யும்

26047505_1779219605441809_5161767557754892563_n « புதுச்சேரி என்ற பெயரில் ஒரு  நாவலை எழுதத் தகவலைத் திரட்டினேன். கிடைத்துள்ள தகவல்கள் ஓரளவிற்குப் போதுமானவை. இருந்தாலும் நன்றாக வரவேண்டுமென்ற அச்சத்தினால் தள்ளிப்போகிறது. இடைவெளியை  நிரப்ப  ஒரு குறு நாவலை  எழுத முடிக்க யோசித்திருந்தவேளை ‘ our souls at night’  (கெண்ட் ஹாரெஃப் என்ற அமெரிக்க எழுத்தாளரின் நாவல்)  என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். குறு நாவலொன்றை எழுதத் தீர்மானித்தது தற்செயலெனில், Lunch box புகழ் ரித்தேஷ் பத்ரா எங்கிற இந்திய இயக்குனர் கைவண்ணத்தில் உருவான இத்திரைப்படத்தைக் காண  நேர்ந்ததும் தற்செயலே. ராபர்ட்ஃபோர்ட், ஜேன் ஃபோண்டா இருவரும் நடித்திருக்கிறார்கள். முதுமை அரிக்கும் இரு மனித உயிர்களின் அந்திம  நோய்க்கு கலை, உளவியல் அடிப்படையில் தீர்வுகண்டிருக்கிறார்கள். இப்படம் வேறொரு சிந்தனையைக் கொடுத்தது. துணை என்ற சொல்லைக் குஈத்து யோசிக்க வைத்தது. அந்த யோசனையைப் புனைவாக்கியதன் பலனே இந்த  நாவல். »

 

‘ரண்கவளம்’   நாவலுக்கு எழுதிய முன்னுரை இது. ஆம், ரணகளம் துணைகுறித்த ஒரு பார்வை. துணை மிகப் பெரிய சொல். துணையுடன் ஆற்றும் வினையே முழுமையை எட்ட உதவும் என்பதைமனிதர்க்கு குறிப்பால் உணர்த்த முற்பட்டதுபோல நமது உடலில் கைகள், கால்கள், கண்கள் நாசிதுவாரங்களென, முக்கிய உறுப்புக்களையெல்லாம்  இயற்கை இரண்டிரண்டாக  படைத்திருக்கிறது. இத்துணையை இணையாக, தோழமையாக, சரி நிகராகக் கொள்வதற்கு மாறாக இரண்டிலொன்றை உயர்த்தி பிடிக்கிறபொழுது, ஈன்றெடுத்தல் சுகப்பிரசவமாக நடைபெறுவது கிடையாது. இரண்டிலொன்றை உதவியாள், சேவகன், அடிமை, இரண்டாம் பாலினம் என்று கீழே  நிறுத்தி பெறப்படும் பலன்கள் முழுமையானப் பலன்களா என்றால் இல்லை. விசுவாசத்தின் பெயரால் செய்யப்படும் வினைக்கும் விருப்பத்தின் பெயரால் செய்யப்படும் வினைக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு.

 

ரணகளம் முன்னுரையில் சொல்லப்பட்டுள்ள ‘our souls at night’  பற்றியும் வேறு இரண்டு தகவல்களையும் பகிர்ந்துகொள்வது ஒருவகையில் அண்மையில் வந்துள்ள என்னுடைய  நாவலை ஏறி நின்று எட்டிப்பார்க்க வசதியாக முக்காலியைப் போடுவது.  ரணகளம்

அந்த வகையில் மூன்று ‘துணை’கள் குறித்து பேசுகிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொருவகை.

 

துணை -1 : இணை

‘our souls at night’  நாவலில் நாயகனும் நாயகியும் எழுபது வயதைக் கடந்தவர்கள். நாயகன் மனைவியை இழந்தவர்,  நாயகி கணவனை இழந்தவள்.   ஒரே தெருவில் அவரவர் வீடுகளில், இன்றையை  நியதிக்கேற்ப  பிள்ளைகளைப் பிரிந்து வாழ்கிறார்கள். இருவரும் தனிமை விபத்துக்குள்ளானவர்கள்,   மன ஊனமுற்றவர்கள். பகல்வாழ்க்கையும் அது சார்ந்த உரையாடலும் வணிப விதிக்குட்பட்ட  நிலையில், தெரிந்தமுகங்கள்கூட சம்பாஷனைகளை சடங்குகளாக அணுகுகிறச் சூழலில் பாசாங்கற்ற அன்பிற்கும் அரவணப்பிற்கும் இரவு வெளிச்சம் தருமென  நம்பும் கதை நாயகி தனிமை வெக்கைக்கு நிழல் தேடும் முயற்சியாக மூதாட்டியான ஜேன்ஃபோண்டா, கிழவர் ராபர்ட் ஃபோர்ட் ஐ தேடிவருகிறாள். அவரிடம்  நேரடியாகவே இரவு என்னுடன் வந்து தங்க முடியுமா எனக் கேட்கிறாள். அவர் தயங்குகிறார். யோசித்து சொல்கிறேன் என் கிறார். ஒரு நாள் இரவு  அவள் வீட்டிற்கு இரவுக்கு வேண்டிய ஆடைகளுடன் பிறர் அறியாதபடி அவள் வீட்டு பின் வாசல்  வழியாக வருகிறார். இருவரும் அவரவர் குடும்பம் பிள்ளைகள், பிடித்தது பிடியாதது என உரையாடலைத் தொடங்குகிறார்கள். அவர்களிடையே  நாம் பலரும் சந்தேகிக்கிற வேறுவகையான உறுவுகள் இருப்பதில்லை. பின்னர்  செய்தி அச்சிறிய  கிராமத்தில் மதுச்சாலைகளில், பொதுவெளிகளில் அவர்களைகிண்டலும் கேலியுமாக விமர்சிக்க உதவுகிறது. சொந்த பிள்ளைகளின் கோப்பத்திற்கும் ஆளாகிறார்கள்.

 

துணை -2 : புணர்ச்சி

 

The Reader என்று மற்றொரு திரைப்படம் பெர்னார் ஷ்லிங்க் என் கிற ஜெர்மன் எழுத்தாளரின்  நாவல். இப்படத்தில் மைக்கேல் பதின் வயது சிறுவன். ஒரு மழை  நாளில் பள்ளியிலிருந்து திரும்பும் வழியில்  மைக்கேல், திடீரென்று  உடல் நலிவுற்று  வருந்துகிறபோது,  டிராம் ஒன்றில் பரிசோதகராக வேலைசெய்யும்,  அவனைக்காட்டிலும் இருமடங்கு  வயதுடைய  ஹன்னா உதவுகிறாள். அவர்களிடையே  நட்பு பிறக்கிறது. நட்பு காதலாகிறது. முதலில் குறிப்பிட்ட படத்தில் உடல் உறவுக்கு இடமில்லை. இங்கே உடல் உறவின்றி அவர்கள் சந்திப்புகள் கழிவதில்லை. முதல் படத்தில்  நாயகனும் நாயகியும் தங்கள் மனதில் உள்ள சேமித்துள்ள அனைத்தையும் உரையாடலாக பகிர்ந்துகொள்கிறார்கள். இப்படத்தில் உடல் உறவு கொள்ளும்  நேரத்திலும் உலக இலக்கியங்களை  மைக்கேல் வாசிக்க ஹன்னா கேட்டு ரசிக்கிறாள். முதல் படத்தில் இருவருக்குமிடையில் ரகசியங்கள் இல்லை. இரண்டாவது படத்தில்  தம்பதிகளிடையே ஒருவர் குறிப்பாக ஹன்னா இளைஞனிடம் மறைக்க ரகசியங்கள் உண்டு.

 

துணை – 3 : காப்பு

Emmanuel-Macron-et-sa-femme-Brigitte-a-l-Elysee-le-2-juin-2015_exact1024x768_p

தற்போதைய பிரெஞ்சு அதிபர் மக்ரோனுக்கும் அவருடைய மனைவி பிரிஜித்திற்கும் இருபத்தெட்டு  வருடங்கள் வித்தியாசம். இருபரும் காதலில் விழுந்த ஆண்டு 1993.  அப்போது  பிரிஜித்  பள்ளி ஆசிரியை நாற்பத்துமூன்று வயது, அவருடைய காதலன் அதிபர் மக்ரோனுக்கு  பதினைந்து வயது. அவர்கள் காதலில் விழுந்தபோது பிரிஜித்தின் முதல் கணவர்  மகளும், அதிபர்மக்ரோனும் ஒரே வகுப்பில் படித்தார்கள். இருந்தபோதும் ஆசிரியையும் மாணவனும் காதலித்தார்கள். பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ள சிறுவனுடனான உறவு பெரும்மாபாலான  நாடுகளைப்போலவே பிரான்சிலும் தண்டனைக்குரியது. எனவே இருவரும் 13 வருடங்கள் காத்திருந்தார்கள். முதல் கணவனை 2006ல் பிரிஜித் விவாகரத்து செய்துவிட்டு 2007ல் மக்ரோனை மணமுடிக்கிறார்.  மக்ரோனுக்கும் பிரிஜித்திற்கும் பிள்ளைகள் இல்லை. பிரிஜித்தின் முதல் கணவர் பிள்ளைகளை ஏற்றுகொள்கிறார். அதிபர் மக்ரோன் தான் ஒரு தன் பாலினவிரும்பி இல்லை என பகிரங்கமாக மறுக்கவேண்டிய  நிர்ப்பந்தம் இருந்தது. இன்றும் 38 வயது பிரெஞ்சு அதிபர் இம்மானெவெல் மக்ரோனும் அவருடைய 66 வயது மனவியும் துணை என்ற சொல்லுக்கு துணை என்ற சொல்லின் சாட்சியாய் நிற்கிறார்கள்..

 

இந்த மூன்று தடத்திலும் துணை என்ற சொல் மேற்குலகில் வெவ்வேறு பொருளில் பயணிக்கிறது.  ‘இது என் வாழ்க்கை, பிறர் குறித்து எனக்கென்ன கவலை !’ என்கிற தனிமனிதன் ஒருபக்கம்.  ‘அது அவன் வாழ்க்கை, நமக்கென்ன வந்தது ! எனக் கருதுகிற சமூகம். இந்த இரு தரப்பிற்கும் மேற்கண்ட உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததில் பங்கிருக்கிறது.    இதில் என்னை ஆச்சரியமூட்டும் விஷயம்  தனிமனித வாழ்க்கைக்கு விசுவாசமாக இருக்கவேண்டி பாசம் பந்தம் போண்ற சொற்களைப் பின்னுக்குதள்ளி வாழும்  மேற்குலக சமூகம் கீழைத்தேய சமூகத்தைக் காட்டிலும் வலிமையுடன் இருப்பது.

 

கடந்தகாலம் கடவுள் சடங்கு  பெயரால் மனித உயிர்களை ஒன்றிணைத்தது. அகக் கூறுகளைக் காட்டிலும் புறக் கூறுகள் அன்று முக்கியத்துவம் பெற்றன. இன்று புறகூறுகள் இடத்தில்  அகக்கூறுகள்.

மேற்குறிப்பிட்ட மூன்று உதாரணங்கள்  சாராது, கீழைப்பின்புலத்தில் துணை என்றசொல்லுக்குப் பொருள் காண முற்பட்டதே ‘ரண களம்’    இங்கே எனது ‘துணை’க்குப் பொருள்,  ‘ நட்பு ‘. துணையின்றியும், பயணிக்கலாம். ஆனால் அலுப்பின்றி பயணிக்க  துணை வேண்டும்.

—————–

வனக்கத்திற்குரிய நண்பர்களுக்கு!

எதிர்வரும் ஜனவரி 12 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில், சென்னை கே.கே நகர் டிஸ்கவரி புக் பேலஸில்

ரணகளம் நூல் வெளியீடு   26047505_1779219605441809_5161767557754892563_n

நண்பர்கள்  நாஞ்சிலார், க.பஞ்சு கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள்.

நேரில் அழைத்ததுபோலக் கருதி நிகழ்ச்சியை  மேலும் சிறப்பிக்கும்படி

வேண்டுகிறேன்.

அன்புடன்

நா.கிருஷ்ணா

 

 

நிகழ்ச்சி நிரல்

 

நாகரத்தினம் கிருஷ்ணாவின்

ரணகளம்   நூல் வெளியீடு அழைப்பிதழ்

***

 

நாள் :             12 -01 -2018 மாலை 6 மணி

 

இடம் :              டிஸ்கவரி புக் பேலஸ்,

எண் 6, மகாவீர் காம்ப்ளெக்ஸ், முனுசாமி சாலை,

கே.கே நகர், சென்னை – 600078

 

***

 

தலைமை :            பேராசிரியர க. பஞ்சாங்கம்

 

சிறப்புரை :      திரு. நாஞ்சில் நாடன்

 

நூல் அறிமுகம் :       திரு. சாம்ராஜ்

 

வாழ்த்துரைகள் :    பேராசிரியர் சு.வெங்கடசுப்புராய நாயகர்,

திரு.சீனு தமிழ்மணி,

கவிஞர் மதுமிதா

நூல் முதற்படிபெறூவோர் : திரு. கி.அ. சச்சிதானந்தன்,

திருமதி சுதாராமலிங்கம்

ஏற்புரை :                  திரு. நாகரத்தினம் கிருஷ்ணா

 

***

தொடர்புகட்கு : தொலைபேசி எண்கள் : 9944064656, 9443622366

 

 

 

புதுப்பிக்கும் எழுத்து

A

 

அண்மைக்காலமாக பிரான்சு நாட்டில் சில உளவியல் மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்கு  நல்ல நூல்களைச்  சிபாரிசு செய்கிறார்கள். சிறைகள் மருத்துவமனைகளில் நூல் நிலையங்களைத் திறந்திருக்கிறார்கள், எழுத்தாளர்களை, அவர் தம் படைப்புகளை மருத்துவமனைகள், சிறைச்சாலைகளுக்கு அழைப்பதும்ன் அதனைக் கைதிகளுக்கும் நோயாளிகளுக்கும்  அளிக்கும் சிகிச்சைகளில் ஒன்றாகப் பார்க்கும் போக்கும் மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து வரும் சூழலில் அலெக்ஸாந்ரு ழெஃபென் (Alexandre Gefen) என்பவரின் புதிய நூல் கவனம் பெற்றுள்ளது.

 

அலெக்சாத்ரு ழெஃபென் நவீன பிரெஞ்சு இலக்கிய உலகின் முன்னணி திறனாய்வாளர்களில் ஒருவர், இளைஞர், பிரெஞ்சு தேசிய ஆய்வகத்தில் நவீன இலக்கிய பிரிவு இயக்குனருங்கூட. அவருடைய சமீபத்திய நூல் « Réparer le monde : la littérature française face aux xxi siècle  »  (உலகைச் சரிசெய்தல் : இருபத்தொன்றாம் நூற்றாண்டு பிரெஞ்சு இலக்கியத்தை முன்வைத்து)

AlexandreGefen-320x320

அவரின் கருத்துப்படி நவீனப் பிரெஞ்சு இலக்கியங்கள் (குறிப்பாக எண்பதுகளிலிருந்து) வடிவம், இலட்சியம், அழகியல் இவற்றிலிருந்து விடுபட்டு  தனிமனிதன், சமூக மேம்பாட்டிற்குச் சிகிச்சையை முன்வைப்பவை.  அல்பெர் கமுய் கூட, தான் பிழையென்றுணர்வதை படைப்பு மூலம் ஒரு கலைஞன் திருத்த முற்படுகிறான், எனக்கூறியிருக்கிறார்.

மேம்போக்கான பொழுதுபோக்கு அம்சங்களிலிருந்து தம்மை வெகுவாக அந்நியப்படுத்திக்கொண்டிருக்கும் நவீன இலக்கியங்கள் நம்முடைய மனநிலை கட்டமைப்பின் மேம்பாடு, அறம் குறித்த ஆழமான கேள்விகள், வருங்காலம் பற்றிய ஐயங்கள், வாழ்க்கை நெறியிலுள்ள  குழப்பங்கள்  ஆகியவற்றிர்க்கு விடைகாணச்சொல்லி சில கணக்குகளைத் தருகின்றன என்பது மட்டும் நிச்சயம்.

மொழிவது சுகம் டிசம்பர் 25 2017

நண்பர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் !

 

அ. ‘பழியெனின்  உலகுடன் பெறினும் கொள்ளலர்’ :ஆர்கே  நகர் தேர்தல் முடிவும்   கவிஞர்  இன்குலாப் குடும்பமும்

இன்குலாப்

இரண்டு நாட்களுக்கு முன்பு  சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு  மறைந்த கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு வழங்கிய சாகித்ய அகாதெமி விருதை அன்னாரது குடும்பம் வேண்டாமென மறுத்திருக்கிறது. இப்புதிய விருதினால் அவருடைய பெருமைக்கு  ஐந்துகிலோ  உபரியாக க் கிடைக்கப் போவதில்லை.  ஒரு பக்கம் பகலில்  முன்வாசல் வழியாகக் கதவைத் தட்டிய விருதையும், அதனோடு வந்த பணத்தையும் சுயமரியாதைக் காத்திட மறுக்கும் ஒரு தமிழ்க் குடும்பம் ; மற்றொரு பக்கம், அர்த்த ராத்திரியில் பின்வாசல் கதவைத் தட்டும் மனிதருக்குத் தங்கள் வாக்குரிமை ஆடையைக் களையைச் சம்மதிக்கும்  தமிழ்க் குடும்பங்கள்.

ஆர்கே நகரிலும் இன்குலாப் குடும்பங்கள் இல்லாமலில்லை.  அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். பாலூட்ட சோரம்போனாளென்று இன்றைக்குத் திரைப்படத்தில் காட்டுவதுகூட  அபத்தமாகவே இருக்கும். விக்டர்யுகோவின்  ழான் வால்ழான்  நிலமையில் ஆர்கே நகர் தொகுதி மக்களுமில்லை, இந்தியா, பிரான்சு நாட்டைப்போல  19ம் நூற்றாண்டின்  இறுதியிலுமில்லை. வறுமை காரணமாக விலைபோனார்கள், என்பதை நம்பத் தயாரில்லை.  ஊழலுக்கும், வாங்கும் இலஞ்சத்திற்கும் வறுமையா காரணம் ?. அப்படியொரு மன நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். மனித உரிமை, பொதுவுடமை, அறம் என மேடையிலும், எழுத்திலும் வாதிடுபவர்கள் கூட  வாய்ப்புக் கிடைத்தால் ஆர்கே நகர் பெருவாரியான மக்கள்தான். நம்முடைய அசல் முகம் வேறு, முகநூல் முகம் வேறு.

மீண்டும் இன்குலாப் குடும்பத்திற்கு நன்றி. இன்குலாப் பெயருக்குள்ள சுயமரியாதையைக் காப்பாற்றி உள்ளீர்கள்.  ‘பழியெனின்  உலகுடன் பெறினும் கொள்ளலர்’ என்ற வரிக்குப் பெருமைச் சேர்த்து, ஆர்கே நகர் பாவத்திற்க்குப் புண்ணியம் சேர்த்துள்ளீர்கள்.

இந்த ஒரு சதவீதம் குறைந்தப்பட்சம் 51 சதவீதமாக மாறினால் தமிழர்க்கு விடிவு உண்டு.

 

ஆ.  குவிகம் இணைய இதழ்

இன்றைக்கு மின்ஞ்சலில் முதன் முறையாக  குவிகம் இணைய இதழ் பற்றிய தகவலை அறிந்தேன்.சில மரணச் செய்திகள் உண்மையில் அதிர்ச்சிக்குரிய  ஒன்று. பாக்கியம் ராமசாமி என்கிற ஜாரா. சுந்தரேசன் டிசம்பர் 7 அன்று இறந்த செய்தி. நான் எழுபதுகளில் விரும்பிப் படித்த தொடர்கள்  அப்புசாமியும் சீதாபாட்டியும்.

நகைச்சுவையுடன்  எழுதத் தனித் திறமைவேண்டும், அதிலும் ஆபாசமின்றி எதார்த்தமென்று குப்பையைக் கிளறாமல் எழுதம் ஆற்றல் இன்று அறவே இல்லை. ஜாரா சுந்தரேசன் பெயரில் எழுதியவையும் அன்று பெருவாரியான வாசகர்களை மிழ்வித்தவைகளே. எழுத்தில் எள்ளலை, நகைச்சுவையை வலியச் சேர்க்காமல் இயல்பாகக் கொண்டுவரத் தனித்திறமை வேண்டும். சுரா, கிரா, கடுகு, கல்கி அகஸ்தியன், தேவன் சாவி என்ற பட்டியல் இன்று சுத்தமாகத் துடைக்கபட்டுவிட்டது.

குவிகம் இதழில் வைத்தீஸ்வரன் எழுதியுள்ள ‘இப்படி ஒரு தகவல்’ என்ற சிறுகதை அவசியம் வாசிக்க வேண்டிய சிறுகதை. எழுதியவர் கவிஞர் வைத்தீஸ்வரனா அல்லது வேறு யாரேனுமா என்று தெரியவில்லை.  இருந்தாலும் சென்னை வாசி ஒருவரின் அன்றாடப் பிரச்சினைகளிலொன்றை மிக அழகாக, வார்த்தைகளைச் சிதற அடிக்காமல் கி மாப்பசான் மொழியில்  நச்சென்று சொல்லியிருக்கிறார்.

வாசிக்க :  (https://kuvikam.com/)

 

 

மொழிவது சுகம் டிசம்பர் 16 2017

. டாக்டர்  ஜேகில் (Dr.Jekyill) முதல் தஷ்வந்த் வரை

 

நீதிமன்றத்தில் காவல் துறையினர் முன் நிறுத்தமுயன்ற தஷ்வந்த் என்ற இளைஞன் மீது மாதர் சங்கம் நடத்தியதாகச் செய்தி. தாக்குதல் நடத்திய  மனிதர்களின் கோபத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இதுபோன்ற தாக்குதல்கள் நியாயமா என்ற கேள்வியும் எழுகிறது.

தஷ்வந்த் பிரச்சினைக்கு வருவோம். ஆறுவயது  சிறுமியைப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிக் கொன்றதற்குத் தண்டிக்கபட வேண்டியவன் என்ற அடிப்படையில் குண்டர் சட்டத்தில்  கைது செய்யப்படுகிறான். அவன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தின்  பிரயோகம் தவறானது எனக்கருதி குற்றவாளியை நீதிமன்றம் விடுவிக்கிறது.  விடுவிக்கபட்டக் குறுகிய காலத்தில் தாயைக் கொலை செய்கிறான்.

ஆறுவயது சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துகிறான் எனில் அவன் நிச்சயம் மனநிலைப் பாதிக்கப்பட்டவன். கைது செய்தபின்னரோ அல்லது அவனை விடுவிக்கிறபோதோ, மனநோய் மருத்துவர்களின் ஆளோசனையைக் கேட்டுப்பெற்றிருக்க வேண்டும்.  சாதாரணக் குற்றவாளிபோலக் கருதி அவனை ஜாமீனில் விடுவித்தது அடுத்து நேர்ந்த விபரீதத்திற்குக் காரணமாகிறது. பல கொலைகள் செய்தவர்கள், காவல் துறையினரிடம் குற்றத்தை நிரூபிக்க உரிய ஆதாரங்கள் இருப்பினும்  ஜாமீனில் வெளிவருவதும், செய்த கொலைக்குப் பழிவாங்கலாக நீதிமன்ற வாசலில் அவர்களே கொலையுறுவதும்  நாம் அடிக்கடி வாசிக்கும் செய்தி. இது நீதித்துறைகளில் உள்ள ஓட்டை.

Laëtitiaஅண்மையில் இவான் ழபோன்கா (Ivan Jablonka)  என்ற பிரெஞ்சு எழுத்தாளர் எழுதி வெளிவந்துள்ள  நாவல் ‘லெத்திசீயா அல்லது மனிதர்கள் முடிவு’ (Laettitia ou la fin des hommes) . உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் புலன் விசாரணைச் செய்து எழுதபட்ட இந்நாவலில் இளம்பெண் லெத்திசீயா பாலியல் வன்முறைக்கு ஆளாகி கொலைசெய்யப்படுகிறாள்.  ட்ரூமன் கப்போட் என்ற அமெரிக்க  எழுத்தாளர் In Cold Blood  என்ற பெயரில் எழுதிய  நாவலின் பாதையைப் பின்பற்றிய எழுத்து. (திண்ணை இணைய இதழில் பல வருடங்களுக்கு முன்பு  எழுதியக் கட்டுரையை வாசிக்க: http://old.thinnai.com/?p=60812041)

லெத்திசீயா அவளுடைய சகோதரி ஜெசிக்கா இருவரும் இளம்வயதில் குடிகாரத் தந்தை, மன நிலைப் பாதிக்கப்பட்ட தாய் என்ற நெருக்கடியான சூழலில்  வளர்கிறார்கள். பின்னர் பிரச்சினை பிரெஞ்சு அரசின் சமூக நலத்துறை கவனத்திற்கு வருகிறது. பெற்றோர் சரியில்லை என்று கருதி இரு சிறுமிகளையும் வளர்க்கும் பொறுப்பு வேறொரு குடும்பத்திடம் ஒப்படைக்கப் படுகிறது. பிரான்சு அரசாங்கத்தின் ஆதரவற்ற பிள்ளைகளுக்கான உதவித் தொகை மற்றும் வளர்ப்புக் கட்டணம் ஆகியவற்றால் இது சாத்தியம். பத்ரோன் என்ற குடும்பத்தில் பெண்கள் இருவரும்(இரட்டையர்கள்) வளர்கிறார்கள்.  இப்படிப் பல குழந்தைகளைப் பருவ வயதுவரை வளர்த்து பின்னர் அரசாங்கத்தின் சம்மதத்துடன் அவர்களுடைய  வாழ்க்கையைத் தொடர அனுமதிக்கும் குடும்பம். இச் சூழலில்தான் லெத்தீசியா நிரந்தரப் பாலியல் குற்றவாளி ஒருவனால்  கொலைசெய்யப்படுகிறாள்.  பிரச்சினை அரசியல் ஆகிறது. அப்போதைய பிரான்சு அதிபர் நிக்கோலா சர்க்கோசி,  லெத்திசீயாவை கொலைசெய்தவன் நிரந்தர குற்றவாளி என்கிறபோது, எப்படி நீதிபதி அவனை வெளியில் அனுமதித்தார் என்ற கேள்வியை வைக்கிறார்.  இனி இதுபோன்ற குற்றவாளிகள் எளிதில் வெளியில் நடமாடாதவாறு  சட்டத்தில்  மாற்றம் கொண்டுவரப்போவதாக  வாக்குறுதி தருகிறார். தாமதமாகத் தெரியவரும் செய்தி லெத்திசீயா அவள் சகோதரி ஜெசிக்கா  ஆகியோரின் வளர்ப்புத்தந்தையும் பல பெண்களைப் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தினார் என்று குற்றச்சாட்டு.  குற்றம் சாட்டியவர்களில் கொலையுண்ட லெத்தீசியா சகோதரி ஜெசிகாவும் ஒருத்தி, விளைவாக அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

நாவல் ஆசிரியர் கொலையுண்ட லெத்தீசியா அவளுடைய பெற்றோர்கள், வளர்ப்புத் தந்தை தாய், கொலையாளியின் பூர்வீகம்,  கொலையாளியாக ஏன் மாறினான் ஆகியப் புலன் விசாரணைத் தகவல்கள்,  ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள், குற்றம் நிரூபணம் ஆவதற்கு முன்பே ஊடகங்கள் சம்பந்தப்பட்டவனைக் குற்றவாளியாகச் சித்தரித்து வழங்குகின்ற நீதி என்று சமூக உளவியல் பிரச்சினைகளைத் தொட்டிருக்கிறார். இந்நாவலை பற்றி எழுகிறபோது இன்று பிரான்சு நீதிமன்றத்தில் வேறொரு வழக்கு வெகு சனத்தின் கவனத்தை பெற்றுள்ளதையும் சொல்லவேண்டும்.

குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் ஒரு நகரத்தின் மேயரும்,  அதே நகரசபையில் கலைப் பண்பாட்டுதுறை பொறுப்பைக் கவனித்த பெண்மணியும். வைக்கப்படும் குற்றச்சாட்டு, இவர்கள் கீழ் பணிபுரிந்த பெண்களைப் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தினார்கள் என்பதாகும். சில  நாட்களுக்கு முன்பு இவ்வழக்கினை விசாரிக்கும் நீதிபதி, ஒரு பெண் நீதிபதியாக அமர்ந்து விசாரிக்க வேண்டிய வழக்கு என சமூக ஊடகத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார். அவ்வாறே சில ஊடகங்கள் இவ்வழக்கு பற்றிய புலன் விசாரனையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சிலத் தகவல்களை வைத்திருந்தன. இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் வழக்கு நடு நிலையுடன் இருக்குமா என்ற கேள்வியை எழுப்பினார்.  குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்றைய தேதியில் குற்றவாளிகள் இல்லை. இரு தரப்பு வாதங்கள், சாட்சிகள்  அடிப்படையில்தான் குற்றவாளியா இல்லையா எனத் தீர்மானிக்க முடியும். ஆனால் இன்று பல நேரங்களில் பல ஊடகங்கள் மக்களின் உணர்ச்சிக்குத் தீனிபோட எதையாவது வெளியிட்டு பரபரப்பூட்டவேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதும். நீதிமன்றத் தீர்ப்பிற்கு முன்பாகவே ஊடகங்கள் தீர்ப்பளிப்பதும் கண்கூடு.

330px-Robert_Louis_Stevenson_Knox_Seriesஇந்த நேரத்தில் ஆர் எல் ஸ்டீவன்சனின் டாக்டர் ஜேகில் மற்றும் திருவாளர் ஹைட்  ஆகியோருக்குள்ள வினோதப் பிரச்சினை (Strange case of Dr. Jekyll and Mr Hyde)  என்ற நாவலைக்குறித்து சொல்லாமல் இருக்க முடியாது. ஸ்டீவன்சனின் முக்கியமான  நாவல்களில் இதுவுமொன்று. ஒவ்வொரு மனிதரிட மும் உள்ள இருவகை எதிரிப் பண்புகளைப் பற்றியது. மனிதரிடமுள்ள தீயகுணத்தை வேரறுக்க ஆசைப்படும் டாக்டர் ஜேகில்  மருந்தொன்றைக் கண்டுபிடிக்கிறார். அந்த மருந்தை தம்மிடத்திலேயே  சோதனை செய்து, இறுதியில் தம்மில் உள்ள தீயமிருகமான  ஹைடுவிடம் தோற்றுப் பலியாகும் கதை.

லெத்திசீயாவைப் பாலியல்வன்முறைக்கு உட்படுத்தி கொலைசெய்த டோனி மெய்யோன் ; லெத்தீசியா சிறுமியாக இருந்தபோது பாலியல் தொல்லைகள் கொடுத்த வளர்ப்புத் தந்தை பத்ரோன், ஹசினியைக் கொலைசெய்த தஷ்வந்த், இன்னும் நீங்கள் அறிந்த பிறர் ஒருவகையில் டாக்டர் ஜேகிலைத் தோற்கடித்த ஹைட்  வகை மிருகங்களாக இருக்கலாம். ஆனால் பல ஹைடுகள் வெளியே டாக்டர் ஜேகில் போல கௌவுரமனிதர்களாக (பிடிபடாதவரை)  நடமாடிக்கொண்டிருப்பதும் உண்மை. அவர்கள் நீதிபதிகளாக அமர்ந்து ஹைடுகளைத் தண்டிக்கலாம், உயர் போலீஸ் அதிகாரியாக இருந்து குற்றவாளியை கைது செய்யலாம். உளவியல் மருத்துவராக தஷ்வந்த்தைக் குணப்படுத்த முன்வரலாம். இதுதான் நமது சமூகம்.

———————————————————

இரணகளம் நாவலிலிருந்து….

 

(விரைவில் சந்தியா பதிப்பகம் வெளியிடவுள்ள எனது நாவலிலிருந்து…)

மறுநாள் காலை, அறைக்கதவு இடிப்பதுபோல தட்டப்பட,  விழித்துக்கொண்டேன். விடுதிப் பையனாக இருக்குமோ ? காலையில் என்ன செய்தியோட  வந்திருக்கிறான் !  என்று அச்சத்துடன் எழுந்தேன். அறைக்கு வெளியே குழல்விளக்கின் வெளிச்சம், இருந்தும்,  நன்றாக விடிந்திருப்பதின் அடையாளமாக மூடியிருந்தச் சன்னற்கதவுகளின்  தப்பிய பகலொளி, அறைக்குள் குருத்தோலைபோல கட்டிலுக்கு இணையாகச் சரிந்து தரையைத் தொட்டிருந்தது. ஒளிக்குருத்திற்குள் உயிர்ப்புள்ள நுண்ணுயிர்களாக தூசுகள் பறந்தன. மீண்டும் கதவுத் தட்டப்பட்டது.   « எழுந்திருடா, இன்னுமா தூங்கற ! » -கணேசன். காலையில் எழுந்து,  புதுச்சேரிக்கு சீக்கிரம் திரும்பவேண்டும் என்று அவனிடம்  உத்தரவிட்ட நானே பொறுப்பின்றி வெகுநேரம் உறங்கியதை நினைத்து  வெட்கப்பட்டேன். வேகமாகச் சென்று தாழ்ப்பாளையும் பின்னர் கதவையும் திறக்க கணேசன் நுழைந்த வேகத்தில் கையிலிருந்த இரண்டு நாளிதழ்களையும் அலங்கோலமாகக் கிடந்த  கட்டிலின் மீது எறிந்தான்.  நாற்காலில் அமர்ந்தவன் பார்வை நான் பார்க்கவேண்டும்  என்பதற்காகவே தலைப்புச் செய்தியில் ஊன்றியிருந்தது. ராஜிவ் காந்தியின் மார்பளவு  படத்தைப் போட்டிருந்தார்கள். உதடுகளைப் பிரிக்காமல் மகிழ்ச்சியைக் கசியவிடும் சிரிப்பு. வலதுப்பக்கம் தலைக்குமேலே அப்படத்துடன் பொருந்தாமற் ஒரு செய்தி.

« ராஜிவ் காந்தி படுகொலை ».

பதற்றத்துடன் எழுந்து « எங்கே, எப்போ »  எனக்கேட்கிறேன்.

« இரவு பதினோருமணிக்கு ஸ்ரீபெரும்பூதூரில் நடந்திருக்கிறது,  குண்டுவெடிப்பில் இறந்துட்டதாகவும், விடுதலைப்புலிகள்தான் கொண்ணுட்டாங்கன்னும் சொல்றாங்க »

– எப்படி ?

– உண்மை என்னன்னு யாருக்குத் தெரியும் மாலைச் செய்தித் தாளில் கூடுதலாகத் தகவல் இருக்கலாம். இல்லை ரேடியொவில என்ன சொல்றாங்கன்னு ஃபாலோ பண்ணனும். அண்ணன்களுக்குத் தெரிஞ்ச பத்திரிகையாளர்களை விசாரித்தால் கூடுதல் தகவல்கள் கிடைக்கலாம். ஆனா அவங்கள இந்த நேரத்திலே பிடிக்கவும் முடியாது, பெருசா எந்தத் தகவலையும் உடனடியா அவங்களால சொல்லவும் முடியாது. கொலைசெய்யப்பட்டது உண்மை. விடுதலைப் புலிகள் பின்புலத்தில இருக்கலாங்கிற தகவலை லாட்ஜ் ரிசப்ஷன்ல இருக்கிற ரேடியோ செய்தியும் சொல்லுது. இப்ப நமக்குள்ள பிரச்சினை, புதுச்சேரிக்குத் திரும்பனும், எப்படி எப்போதுங்கிறதுதான்.

– ஏன் ?

– சன்னற் கதவைத் திறந்து வெளியே எட்டிப் பாரு !

எழுத்து சென்று சன்னற்கதவுகளை விரியத் திறந்து கம்பிகளில் முகத்தை அழுத்தி வெளியிற் பார்த்தேன். கடைகளின் கதவுகள்  இறக்கப்பட்டிருக்கின்றன. சைக்கிள் விற்பனை செய்யும் நிறுவனம்போலிருந்த ஒன்றில், இறக்கி நவ்-தால் பூட்டு போட்டிருந்த பெரிய சுருள்கதவை யொட்டி, நடுத்தரவயதைக்கடந்த பெண்மணியொருத்தி படுத்திருந்தார்.  வறுமை அவர் வயதை அதிகரித்திருப்பதுபோல பட்டது. இடக்கையைத் தலைக்குக் கொடுத்து, முட்டுக்கொடுக்காவிட்டால், மார்புகளிரண்டும் பாரம் தாங்காமல்  கீழே விழுந்துவிடுமோ என்றஞ்சியவைபோல  முழங்கால் மூட்டுகள்  வயிற்று மடிப்பில் புதைந்திருக்கின்றன.  அவர் உதட்டில் அமர்ந்திருந்த ஈக்களை, விரட்ட தெரு நாய் ஒன்று நெருங்கி, பின்னர்  விலகிச் செல்கிறது, கடையையொட்டி  மாநில கட்சியொன்றின் வெட்டிச் சாய்க்கப்பட்டக் கொடிக்கம்பம்.  மனிதர்கள், வாகனங்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்த சாலையின் நடுவில் அசைபோட்டபடி படுத்திருக்கும் ஒரு பசுமாடு. காங்கிரஸ் கொடியுடன் கும்பலொன்று ஒவ்வொரு கடையாய் நோட்டம் விட்டபடி செல்கிறது. ராஜிவ் காந்திக்கு மாலைபோட்டு நாற்காலியில் உட்காரவைத்து, வாழைப்பழத்தில் ஊதுபத்திக் கொளுத்தியிருந்த கடையில், ரேடியோவைச் சத்தமாக வைத்திருந்தார்கள். காப்பியும் டீயும் மும்முரமாக வியாபாரமாகிக் கொண்டிருந்தன. தன்னிச்சையாக எனது கண்கள் எங்கள் காரைத் தேடின. விடுதியின் நுழைவாயிலையொட்டி, நாங்கள் இறங்கினால் கண்ணிற் படுமாறு  எங்கள் சாரதி, வாகனத்தை  நிறுத்தியிருந்தார். ஆனால் தற்போது அவருமில்லை வாகனமுமில்லை.

– நம்ம காரையும் காணோம், டிரைவரையும் காணோம், என்றேன்.

– காலையில் கடைகளை மூடச்சொல்லி ஒரே கலாட்டா. நம்ம அம்பாஸடர் மட்டுமல்ல அங்கே நிறுத்தியிருந்த டாக்ஸிகள், ஆட்டோக்களையெல்லாங்கூட காணலை.மெயின் ரோட்டிலிருந்தா வாகனங்களுக்கு ஆபத்தென்று,மறைவா எங்கனாச்சும் கொண்டுபோயிருப்பாங்க. நம்ம டிரைவரும்  அப்படி போனவனாதான் இருக்கனும், வந்திடுவான். பயப்படவேண்டியதில்லை.

– அப்ப நம்ம புதுச்சேரி பயணம் ?

–  இப்பத்திய நிலமையிலே புறப்படறது நல்லதில்லைன்னு தோணுது.  வழியெல்லாம் நிலமை இப்படித்தான் இருக்கும். நாம இரண்டுபேர் மட்டுமில்லை. அம்மா வேற இருக்காங்க. அவங்களையும் பார்க்கணும்.  பதட்டம் கொஞ்சம் தணிஞ்சதும் கிளம்பிடுவோம்.  என்ன சொல்ற.

–  நான் என்ன சொல்லப் போறன். அப்படித்தான் செய்யனும். அம்மாவுக்கு சாப்பிட ஏதாவது ஏற்பாடு பண்ணியா.

– அவங்க மட்டுமில்லை நாம்பளும்தான் சாப்பிடனும். லாட்ஜ் பையனை அனுப்பி ஏதாவது கிடைக்குதான்னு பாக்கச்சொல்றன். இல்லைன்னா பிஸ்கட் கிடைச்சாக்கூட போதும்.  டிரைவரையும் கண்டுபிடிக்கனும்.

– நான் பேப்பர் படிக்கிறேன். நீ போய் முதலில் அம்மாவைக் கவனி. வேண்டுமானால் பதினோருமணிக்கு அறையைப் பூட்டிக்கொண்டுவறேன்.  தயாரா இரு, இரண்டுபேருமா கீழே இறங்கி போய் பார்த்துட்டு, அப்படியே ஏதாவது சாப்பிடக் கிடைச்சால் வாங்கிட்டு  வரலாம். தவிர என் வொய்ஃபுக்கும் நிலமையை விளக்கி, சாயந்திரம் புறப்பட்டுவருவதாகச் சொல்லனும்.

கணேசன் தலையாட்டிவிட்டு  வெளியேறியதும், கதவைச் சாத்திவிட்டு, கட்டிலில் உட்கார்ந்து முதல் பக்கத்தைப் பிரித்து வாசிக்க முயன்றேன். ராஜிவ் காந்தி படுகொலை என்ற தலைப்புச் செய்தியைக் கண்கள் வாசித்த மறுகணம் ‘அக்காள்’ என்று உதடுகள் முனுமுனுத்தன.  ‘தற்கொலையைத் தவிர எல்லா மரணங்களுமே ஒருவகையில் கொலைதான்’ என்று அக்காள் வாதிட்டது நினைவுக்கு வந்தது.  « மனிதர்கள் பிரம்மாக்கள் மட்டுமில்லை எமன்களும்தான் » என்பாள் அவள். « இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் யுத்தங்களும், உயிர்ப்பலிகளும் இல்லையென்றால் கொண்டாடுவோமா ? », எனக் கேட்டிருக்கிறாள்.  அகால மரணங்களில் நமக்குள்ள ஆர்வமே சிலப்பதிகாரம். அதன் படைப்பாளிக்குக் கோவலன் கொலைக்கும்,  மதுரை எரிப்பிற்கும் வேறு காரணங்கள் இருந்திருக்காதென்பது அவள் வாதம்.  தலைவர்கள் கொலைகளைப் பற்றிய அவள் கருத்தும் அலட்சியப்படுத்தக் கூடியதல்ல. 1989ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆறாந்தேதியோ அல்லது எழாம் தேதியோ  என்று நினைக்கிறேன். இந்திராகாந்தியின் கொலையாளிகளில் எஞ்சியிருந்த ஒருவரையும், கொலைக்கு உடைந்தையாக இருந்த மற்றொருவரையும்  தூக்கிலிடப்பட்ட செய்தி, நாளேட்டில் வந்திருந்தது.  அதுபற்றிய பேச்சில் : « ஆட்சியாளர்கள் வரலாற்றில் திடீரென்று இடம் பிடிப்பதில்லை, குறுக்கு வழியோ நேரான வழியோ எதுவென்றாலும் இடையில் பலகாலம் காத்திருக்கிறார்கள். பதிலாக  அவர்களின் கொலையாளிகள் ஒரு நாளில்  ஓர் இரவில், சட்டென்று அந்த இடத்திற்குத் தாவி விடுகிறார்கள்.  இந்திராகாந்தியின் வரலாற்றுடன் அவரைக் கொலைசெய்தவரும் சாகாவரம்பெற்றுவிடுவார். இதற்காகவே செய்யாத கொலையை தாம் செய்ததாகப் பொறுப்பேற்கும், மனிதர்களும் இருக்கக்கூடும். » என்ற அவள் கருத்தும் சரியானதுதான். அவள் படித்தது எட்டாம்  வகுப்புக்குவரைதான். அந் நாட்களில் எங்கள் ஊர் பெண்களுக்கு அதுவே அதிகம் என்ற நிலமை. ஆனால் எதைப்பற்றியும் தனக்கென்று ஓரு கருத்தை உருவாக்கிக்கொள்ள அவளால் முடிந்தது.  இருத்தல், இன்மை போன்ற  மேற்கத்திய நுட்பமானத் தத்துவச் சொற்களையோ ; பிறப்பு இறப்பு,ஊழ்வினை, கர்மம்போன்ற கீழைத்தேய  சொல்லாடல்களையோ கையாளாமலேயே, தம்மைச் சுற்றியுள்ள சமூகதத்தின் செயல்பாடுகளிலிருந்து கற்றவைகளை அவளால் சமையலுக்குக் காய்கறிகளை நறுக்கிக் கொண்டோ, அரிசி களைந்துகொண்டோ , வாணலியில் முறுக்கைப் பிழிந்துகொண்டோ, நெற்றியில் விழும் முன் கேசத்தை முழங்கையால் ஒதுக்கியபடி பகிர்ந்துகொள்ள இயலும்.

அகால மரணங்கள் எதுவென்றாலும் ஒருவகையில் கொலைதான்.  குதிரை தள்ளிவிட்ட து, இறந்தான். பேருந்து பள்ளத்தில் உருண்டது பயணிகளிகளில்  ஐந்துபேர் செத்தார்கள், அறுவை சிகிச்சைப் பலனளிக்கவில்லை நோயாளி இறந்தார் என்றாலுங்கூட குதிரை, பேருந்து, சாரதி, மருத்துவர் ஆகியோருக்கு நடந்த  உயிர்ப்பலிகளில் பங்கிருக்கிறது. திட்டமிட்டு ஏற்படுத்திய மரணம், திட்டமிடாது ஏற்படுத்திய மரணமென்று வேண்டுமானால் வகைப்படுத்தி,நீதிக்கு உதவலாம். கொலயுண்ட தலைவர் ஒரு நாட்டின் பிரதமர். அந்த நாடு உலகமெங்கும் வெவ்வேறு காரணங்களால் அறியப்பட்ட நாடு. அம்மரணத்தை முன்னிட்டு ஊடகங்கள் கட்டமைக்கும் மாயைகள், நிச்சயமற்ற அரசியல் சூழல், தலைவனின் இறப்பைக் கலவரமாக அடையாளப்படுத்த முனையும் தொண்டர்கள், முன்னெச்சரிக்கை என்றபேரில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள், ஆயிரக்கணக்கில் குவிக்கப்படும் போலீஸ்காரரர்கள்  எல்லாம் சேர்ந்து இவர்களின் மரணத்திற்கு ஹீரோ தகுதியைக் கொடுத்துவிடுகிறது. இத்தகைய தலைவர்களின் அகால மரணத்தினால் சராசரி குடிமகனின் ஒருவேளைச் சாப்பாடு, மறுநாள் இல்லை என்று  ஆகிவிடுமா ? என்னிடத்தில் இக்கேள்விக்குத் தெளிவான பதிலில்லை.  ஆனால் நாட்டின் வேறொரு வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு சிலருக்கு சில கோடிகள் கூடுதலாக கிடைக்கும் அல்லது கிடைக்காமற்போகலாம், என்பது மட்டும் நிச்சயம். அந்த ஒரு சிலருக்குத் தலைவர்களின் மரணங்கள்  ஏற்படுத்தும் தாக்கம் அரசியல்  பொருளாதார வல்லுனர்களின் விவாதத்திற்குரியது. செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும்  இறந்த தலைவர்கள் மட்டுமல்ல அவர்கள் இறப்புக்குக் காரணமானவர்களும் முக்கியத்துவம் பெற்று விடுவார்கள். ஒரு தலைவர் அகாலமரணமடையும் தினத்தில் எத்தனை எத்தனை மரணங்கள் : சாலை விபத்தென்ற பேரில் கொலையுறுபவர்கள். மருத்துவமனைகளிலும், காவல்துறையிலும் கொடுக்கப்படும் பலிகள், யுத்தங்களில் கொல்லப்படும் உயிர்கள் ; அரசியல் காழ்ப்புகள், தொழிற்போட்டிகள், குடும்பப்பிரச்சினைகள் என்று நிகழும் அகால மரணங்களுக்குத்தான் எத்தனையெத்தனை காரணங்கள்.  இதுபோன்ற மரணங்களில் இறப்பவர், அந்த இறப்புக்குக் காரணமானவர்கள் என  நம்பப் படுவர்கள் அனைவரும் ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றின் கருணையால், பொதுவெளியில் திடீரென பிறப்பெடுத்து, பிறப்பெடுத்த வேகத்திலேயே மறைந்தும்போகிறார்கள். அக்காளுக்கு அந்த அதிஷ்டம்கூட இல்லை, எனவேதான் கணேசன் உதவியோடு இதை எழுத உட்கார்ந்தேன்.

அக்காள் மரணம் கீட்ஸ் கொண்டாடும் மரண வகைஅல்ல, சிறுகச் சிறுக அரங்கேற்றப்பட்ட மரணம்.  அவள் இந்திரா காந்தியைப் போலவோ, கென்னடியைப் போலவோ வெள்ளிக்கரண்டியுடன் பிறந்தவள் கிடையாது.  காந்தியைப்போல  இலண்டனில் பாரீஸ்டர் பட்டம் பெற்று இந்தியாவில் ஆங்கிலேயரை எதிர்த்தவளுமில்லை. ஊர்பேர் தெரியாத கிராமத்தில் காலையில் சாணம் தெளித்துக் கோலம்போடப் பிறந்தவள். பதினெட்டு வயதில் திருமணம், முப்பது வயதில் நான்கு பிள்ளைகள்.  நாற்பது வயதில் பாட்டி,  அறுபது வயதில் காசநோயில் செத்தாள் என்று வாழ்க்கையை  முடித்திருந்தால் அவளைப்பற்றி எழுத ஒன்றுமில்லை. வாகனத்தில் அடிபட்டு சாலையில்   இரத்தமும் சதையுமாகக் காய்ந்துகிடக்கும் நாயைப்பற்றியோ, பூனையைப்பற்றியோ என்ன அபிப்ராயம் உங்களுக்கு வந்திருக்கும், எத்தனை நொடிகள் அந்த அனுபவம் உங்களோடு வாழ்ந்திருக்கும் அதுபோலத்தான் அக்காளின் மரணமும் முடிந்திருக்க வேண்டியது. அவள் இந்தியாவின் பிரதமர், இஸ்ரேலின் கோல்டாமேயர், பாகிஸ்தானின் பெனாஸிர் பூட்டோ என்றெல்லாம் நாட்டை ஆண்டவள் இல்லை. தமிழ்  நாட்டில் ஒரு கிராமத்தில் பிறந்து, பெரிய பட்டங்கள் ஏதுமின்றி, கணவர் விட்டுச் சென்ற வியாபார நிறுவனங்களைத் துணிச்சலாகக் கையிலெடுத்தவள், சரித்திர புருஷி கிடையாதென்றாலும் இச்சமூகத்தின் மனுஷி. அவளுடைய பிறப்பைக்குறித்து பேச எதுவுமில்லை, ஆனால் அவளுடைய மரணம் குறித்து பேச இருக்கிறது.

—————————————–

 

எம். எஸ் மறைவு

சற்று முன்புதான் இறந்த தகவலை அறிந்தேன். அவரை அறிந்த பலருக்கும்  பெரும் இழப்பு.  ‘வணக்கம் துயரமே’ என்ற என்னுடைய மொழிபெயர்ப்பு நூலுடன்  அவருட னான அறிமுகம் தொடங்கியது. நல்ல படைப்பிலக்கிய ரசனையுள்ள மனிதர்களில் எம்.ஏஸ் ஒருவர். கி.அ. சச்சிதானந்தத்தைப் போலவே ஆங்கிலம் தமிழ் இரண்டிலும், பரந்த ஆழமான வாசிப்பு, ரசனை அவரிடமுண்டு. சுரா வை எனக்கு நேரிடையாகப் பரிச்சயமில்லை. அக்குறையைப் போக்கியவர் எம். எஸ். இரண்டொரு முறை அவரிடம்  நாகர்கோவில் சென்ற போது உரையாடி இருக்கிறேன்.  நாம் சொல்வதெல்லாம இதுவரை தாம் அறிந்த தல்ல கேட்டதல்ல என்பதுபோல குறுக்கீடின்றி அனைத்தையும் பொறுமையாக செவிமடுப்பார். ஆனால் « என்முன்னால் அமர்ந்திருப்பது இமயம்,  நான் வெறும் கூழாங்கல் » என்ற எண்ணம் எனக்கு அடிக்கடித் தோன்றும்.  தமது அபிப்ராயங்களைக் கருத்துக்களை மிகவும் தயக்கத்துடனேயே தெரிவிப்பார்.  அவர் தெரிவிக்கிற யோசனைகளை மறுப்பதற்கு எனக்குத் தைரியம் காணாது, காரணம் காலச்சுவடுப் பதிப்பகம் வெளியிட்ட எனது முதல்  நூலிலேயே அவரது அருமை எனக்குப் புரிந்திருந்து. ‘காஃப்காவின் நாய்க்குட்டி’    நாவலுக்கு முதல் பாராட்டு அவரிடமிருந்து தான் கிடைத்தது.  போனவருடம் அவரைச் சென்று சந்தி த்திருக்கவேண்டும். ஒவ்வொருமுறையும்   நண்பர் கண்ணனிடம் பேசும்போதெல்லாம் எம். எஸ்ஸை சந்திப்பதற்கேனும் நாகர்கோவில் வரவேண்டுமென சொல்வேன். எனக்கு அப்படியொரு கொடுப்பினையில்லை என்று இப்போது நினைக்கிறேன்.

ஒரு மரணத்தை மையமாகக் கொண்டு  அண்மையில் சிறியதொரு நாவலை எழுதியிருக்கிறேன். விரைவில் அது நூலாக வெளிவரவுள்ளது. அந்த  நூலை சுராவிற்கும் எம். எஸ்சிற்கும் சமர்ப்பணம் செய்திருக்கிறேன். அதை எம்.எஸ்  படிக்கவேண்டுமென்று ஆசைபட்டேன்.  சந்தியா பதிப்பகத்தில் கொடுத்திருப்பதால், நூல் வெளிவந்ததும் ஜனவரியில் ஒரு பிரதியை  நாகர்கோவிலுக்குச் சென்று அவர் கைகளில் கொடுக்க ஆசைப்பட்டேன். அது நிறைவேறவில்லை.

அன்னாரின் மறைவு காலச்சுவடுக்கு மட்டுமல்ல, தமிழ் படைப்பிலக்கியத் துறைக்கும் மிகப்பெரிய இழப்பு.

மொழிவது சுகம்  25 நவம்பர் 2017 : அ. பொறுமைக் கல்  -அதிக் ரஹ்மி ஆ. என் கடன் உயிரை வதைப்பதே !

 

                Pierre de patience  

அ. பொறுமைக் கல்  -அதிக் ரஹ்மி

ஆப்கானிய நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட பிரெஞ்சுக் குடியுரிமைப்பெற்ற எழுத்தாளர் அதிக் ரஹ்மி (Atiq Rahimi )  என்பவரின் நாவல் Syngué  Sabour. இப்பெயர் அரபுப் பெயராக இருக்கலாம். பிரெஞ்சு மொழியில் Pierre de Patience  என்று நாவலுக்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. எளிமையான கதை அல்லது உண்மை. பொய்களை உரைப்பது கடினமான  வேலை. பிறரைக் கவர  நகாசு வேலைகள் வேண்டும். பேன்ஸி ஸ்டோர் கூட்ட த்தை அள்ள பொன்மூலாம் பூசவேண்டும். ஆனால் உண்மையைச் சொல்வது, முகத்திற்கு மஞ்சள் இடுவதுபோல. தரிசித்த முகம் வீடுவரை நம்மோடு வரும், அதிகாலை இளங்காற்றுபோல மனதை ஸ்பரிசிக்கும். அதிக் ரஹ்மி  திரைப்படக் கலைஞன், எனவே ஒவ்வொருக் காட்சியையும், காமெராவின் கோணத்திற்கேற்ப அமைத்துக்கொண்டு நகர்த்துகிறார்.

ஆப்கான் யுத்தம் ஆண்டுகள் பலவாக தொடருவதை அறிவோம்.   சொந்தக் கவலைகளை மறக்க, அண்டை வீட்டானின் பிரச்சினை உதவுவதும் நமக்குப் புதிதல்ல. பக்கத்து வீட்டுக்  குழாயிலும் தண்ணீர் வரவில்லை என்ற செய்தியில்தான் தற்காலிக நிவாரணம் கிடைக்கிறது.  ஆப்கான் போன்ற  நாடுகளிலோ அதிபர் உட்பட எல்லா வீடுகளிளும் பிரச்சினை. அண்டைவீட்டுப் பிரச்சினை மட்டுமல்ல  என் வீட்டுப் பிரச்சினையுங்கூட என  அம்மண்ணிற் பிறந்த  அதிக் ரஹ்மி நாவலை எழுதியுள்ளார். அண்டை வீடு,  எதிர்த்தவீடு மட்டுமல்ல தன்வீடும் எழவு வீடுதான் எனச் சொல்கிறார் ஆசிரியர்.

ஆப்கானின் தீராப்பிரச்சினையான உள் நாட்டுப்போரில் ஒரு பிரினருக்கு ஆதரவாக போரில் இறங்கி  குண்டடிப்பட்டுக் கோமாவில் கிடக்கும் கணவனிடம், மனைவி  வீட்டையும் நாட்டையும் நிர்மூலமாக்கும் பணியை ஓயாது தொடரும் மனிதர்களை, அவர்களின் அறங்களை, இரக்கமற்ற வாழ்க்கை முறையை,  அதன் விளைவுகளை தனக்கமைந்த வாழ்க்கை அடிப்படையில் ஊரை எரிக்காமல், மனிதர்களை எரிக்காமல் வார்த்தை குண்டுகளால் துளைத்தெடுக்கிறாள். அர்த்தமற்ற சகோதரப்போரில் படுகாயமுற்று சவம்போல வீட்டில் கிடக்கும் கணவனையும்,பிள்ளைகளையும் காப்பாற்ற சோரம் போகும் பெண்மணி,  விரக்தியின் உச்சத்தில் சமூகத்தையும் மனிதர்களையும்  கடுமையாக விமர்சிக்கிறாள். கணவனை ‘பொறுமைக் கல்லாக’  பாவித்து அக்கல்லிடம்  ஒளிவு மறைவின்றி அனைத்தையும் கோபத்துடன் கொட்டுகிறாள். ஆப்கானிய சமூகத்தில் குடும்பம், பெண்களின் நிலைமை, பெண்களிடம் மட்டும் கன்னித் தன்மையை எதிர்பார்க்கும் ஆண் வர்க்கம் என அனைத்தும் பராசக்தி வசனத்தில் சொல்லபட்டிருக்கிறது.

« மனிதரின்  நெற்றியில் திரவம் சொட்டு சொட்டாக விழுகிறது. சுருக்கங்களின் மடிப்பில் விழுந்தோடிய திரவம் சில நொடிகளுக்குப் பிறகு மூக்கின் தொடக்கத்திற்குத் தமது திசையை மாற்றிக்கொண்டு அங்கிருந்து கண் வட்டத்திற்குள் பரவி, பின்னர் கன்னத்தை வருடுவதுபோல ஓடி கனத்த அவருடைய மீசையில் முடிந்தது.

உறங்கப்போகும் சூரியன்

விழித்துக் கொள்ளும் மனிதரினம்

இன்றிரவும் அழிவுகள் தொடரும் !

இன்றிரவும் உயிர்ப்பலி தொடரும் !

காலையில் மழை பொழியும்

நேற்றைபோலவே

நகரமும் இடிபாடுகளும்

மழையில்  நனையும் !

காயங்களையும்

செத்த உடல்களையும்

மழை  நீர் கழுவும் ! »

போன்ற வரிகள், இலக்கியத் தகுதியை உறுதிசெய்பவை.பிரான்சு நாட்டின் கொன்க்கூர் இலக்கிய பரிசை (2008) வென்ற நாவல்.

ஆ என் கடன் உயிரை வதைப்பதே !

மனிதர் வாழ்க்கையில் கடன்படுவது இயற்கை. உலக மொழிகள் அனைத்திலும் கடன் என்ற சொல் இருக்கிறது.  ‘காதலன்’(l’amant) என்ற சுயபுனைவு  நாவலில் மார்க்கெரித் துராஸ் என்ற பிரெஞ்சு பெண் எழுத்தாளர், இந்தோ சீனாவில் பிரெஞ்சு கிழக்கிந்திய  நிறுவன ஊழியர்களுக்கு கடன் கொடுத்த செட்டியார்கள், அதிகாலையிலேயே வீட்டிற்கு வந்து,  எவ்வளவு சாக்குப்போக்குகள் சொன்னாலும் நம்பாமல், வட்டியைப் பெற்றபின்பே செல்வார்களென  குறிபிட்டிருப்பார்.

ஒருவரிடமிருந்து பெற்ற ஒரு பொருள், திரும்ப அவரிடம் ஒப்படைக்கப்படும்  என்ற உறுதியின்பேரிலும், நம்பிக்கையின் அடிப்படையிலும் இன்னொருவரிடம் கொடுக்கப் படுகிறது. அந்த இன்னொருவர் வாங்கியப் பொருளைத் திருப்பித் தரும்வரை கடனாளி. அன்றாட வாழ்க்கையில் விதவிதமான கடன் பரிமாற்றங்களைச் சந்திக்கிறோம்.  « கடைக்குப் போகலை, இரண்டு கரண்டி காப்பித்தூள் கொடுங்க, நாளைக்குத் திருப்பித் தரேன்(மாதத்தில் இருபது நாட்கள் இப்படி இரவல் வாங்கியே சிக்கனமாக குடும்பம்  நட த்தும் பெண்கள் இருக்கிறார்கள் எனப் பெருமைப் படாதீர்கள், எனக்குத் தெரிந்த அப்படியொரு பெண்மணி, மாதத்திற்கு பத்து சினிமாக்கள் பார்ப்பார்) » ; « அடட இந்தப் புத்தகம் உங்க கிட்ட இருக்கா ?» எனக்கேட்டு புத்தகத்தை இரவல் வாங்கிச் செல்பவர்கள், « பெயிண்ட் கடைக்கு வந்தேன் 5 ரூபாய் குறையுதுங்கிறான், கைமாத்தா கொடுங்க, நீங்க ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு வரும்போது,கொடுத்திடுவேன்! » இப்படி கடன் களுக்கு பல முகங்கள் இருக்கின்றன. இதற்கு வராக் கடன் என்று பெயர்.

இந்த வராக்கடன் பட்டியலில், வேறு சிலகாரணங்களை முன்னிட்டு பெரிய அளவில் பரிமாற்றம் செய்யப்படும் கடன்களும் இருக்கின்றன. உலக வங்கிக் கடன்கள், பன்னாட்டு  நிதி  நிறுவனத்தின் கடன்கள் , முன்னாள் இந்தியன்வங்கி மேலாளர் பாணியிலான கடன்கள், மல்லையாக்களுக்கு அளிக்கப்படும் கடன் களும் உள்ளன. இவை திரும்பவராதென கொடுப்பவருக்கும், திருப்பித் தரவேண்டிய அவசியமில்லையென வாங்கியவருக்கும் தெரியும்.

கடன் தரும் பொருள் எந்த வடிவத்திலும் இருக்கலாம். இக்டன் பணமாகவோ, பொருளாகவோ பரிமாற்றத்திற்கு உள்ளாகிறபோதுதான் பிரச்சினை. ஆனால் இவற்றையும் திரும்பத் தர உத்தேசமின்றி, மறந்த துபோல பாவனை செய்யும் மனிதர்களுக்கு சிக்கல்களில்லை. கடன்பெற்றவர் மானமுள்ள மனிதராக இருந்தால் தான் பிரச்சினை. வங்கித் தொழில்,  கடன் வர்த்தகம் போன்றவை இவர்களை நம்பியே இருக்கிறது.  கடன் பெற்ற பணத்தைத் திட்டமிட்ட பொருளியல் நடவடிக்கையில் முதலீடு செய்து தானும் பயன்பெற்று, வங்கிகள், நிதி  நிறுவனங்களை முடக்காமல் தம்மைப்போன்று பிறரும் பயனடையச் செய்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால்  நம்மில் பலருக்கு  எந்தவித திட்டமிடலும் கிடையாது. இத்தகைய மனிதர்கள்  கொஞ்சம் யோசித்து செயல்பட்டாலே கடன் தொல்லையிலிருந்து மீள்வது எளிது. கடன் கொடுத்த மனிதர்களை முழுக்கக் குற்றம் சாட்டுவதில்  நியாயமுமில்லை. கடன் கேட்கும் போதே இந்த முறைசாரா கடன் தொழிலில் உள்ள ஆபத்தை உணரவேண்டும்.

கடன் பிரச்சினையில் தவிப்பவர்களில் பெரும்பாலோர் கீழ்க்கண்டவையினர்தான் :

  1. 500 ரூபாய் சம்பாத்தியத்தில் 300 ரூபாயைக் குடித்து அழிப்பவர்கள்,
  2. வண்ணாரப்பேட்டையில் ரவுடியிஸம் பண்ணும் கதா நாயகன், டூயட் பாட லாஸ் வேகாஸ் போகவேண்டும் என்கிற இயக்குனரின் அறிவுபூர்வமான யோசனையை,அப்படியே ஏற்கும் தயாரிப்பாளர்,
  3. ஆழ்கிணறுக்கென கூட்டுறவு வங்கியில் பெற்ற கடனில் சூப்பர்வைசருக்கு, கடன் தரும் கோப்பைக் கவனிக்கிற கிளார்க் இவர்களுக்குப் பங்களித்ததுபோக இருக்கின்ற தொகையில் பெண்ணுடைய கல்யாணத்தையோ, மஞ்சள்  நீரையோ  நடத்தும் விவசாயி,
  4. கவர்மெண்ட் ஆஸ்பத்திரி வேண்டாம் பிரைவேட் ஆஸ்பத்திரியிலதான் நல்லாபார்பாங்க, கவர்மெண்ட் பள்ளிக்கூடம் வேணாம் அந்தக் கான்வெட்டுல தான், அந்த காலேஜுலதான் பிள்ளை படிக்கனுமென்று தங்கள் வருவாய் பற்றிய புரிதலின்றி இறங்குகிறவர்கள்.
  5. கடன் வாங்கிய பணத்தில் சபரிமலைக்குப் போகிறவர்கள்.
  6. மொய் வந்த தும் திருப்பிடுவேன், என பிள்ளைக்கோ பெண்ணுக்கோ தங்கள் நிலமைக்கு மீறி ஆடம்பரமாகச் திருமணம் செய்து வைப்பவர்கள்.
  7. அரசியல்வாதிகள், அரசு அலுவலக ஊழியர்கள், அதிகாரிகள், காவல் துறையினர் இவர்களில் பெரும்பாலோர் பணைத்தை அளவிடாமல் செலவழிப்பதற்குக் காரணம் இருக்கிறது, அவர்களின் வருவாய் அப்படி. அத்தகையோரின் வாழ்க்கையை அண்டைவீட்டிலும் எதிர்வீட்டிலும் காண்கிற மனிதர்களில்  ஒரு சிலருக்கு அவர்களைப்போலவே  பணத்தை எளிதாகச் சம்பாதிக்க கிடைக்கும் உபாயம், எதிர்ப்படும் நபரிடமெல்லாம் கடன் வாங்குவது.

1998ல்  நோபெல் பரிசுபெற்ற அமர்த்யா சென் வெளி  நாட்டைசேர்ந்தவர் இல்லை, இந்தியர்.  சிறு கடன் பிரச்சினைகளுக்கு, வறுமைக்கு எளிதான பல தீர்வுகளை உழைக்கும் மக்களுக்கென கைவசம் வைத்திருக்கும் அறிஞர்.  சமூகவியல், பொருளியல் இரண்டிலும் தேர்ந்தவர். அசோக்குமார் போன்றவர்களின் பிரச்சினைக்கு  தீர்வு கிடைக்குமா என்று தெரியாது ஆனால் தினக்கூலி கடனாளியைக் கந்துவட்டியிலிருந்துக் காப்பாற்ற அவரால் முடியும்

————————————-