Bonjour,
Je vous contacte par l’intermédiaire des éditions Zulma, concernant un projet de découverte de la littérature indienne que notre association mettra en place, début 2021. En partenariat avec la Région Centre-Val de Loire, nous proposerons à 2 villes de la région Centre-Val de Loire (Jargeau & Châteaudun) une résidence d’une vingtaine de jour autour de la littérature indienne et plus spécifiquement autour de la littérature du Tamil Nadu, littérature Tamoul.
Nos recherches nous ont mené vers votre travail, vos écrits. Par ce mail, je souhaitais vous présenter ce projet dont vous trouverez une présentation en pièce jointe mais aussi pouvoir en discuter de vive-voix avec vous afin d’envisager quelque chose ensemble.
Je vous joins également un lien pour consulter notre site internet et faire connaissance avec notre association: http://www.tuconnaislanouvelle.fr/
Je reste disponible pour toute information complémentaire.
Bien cordialement,
Justine Pasdois
Chargée d’administration
இம்மின்னஞ்சல் கடந்த டிசம்பர் மாதம் எனக்கு கிடைத்தது. Tu Connais la nouvelle என்கிற ஓர் இலக்கிய அமைப்பு எழுதியிருந்த து. பிரெஞ்சு பதிப்பாளர் Editions Zulma என்பெயரைச் சொல்ல என்னைத் தொடர்பு கொண்டார்கள்.
இந்த அமைப்பு வெகுகாலமாக பிரான்சு தேசத்தின் பிற மாகாண எழுத்தாளர்களையும் எழுத்துக்களையும் புரிந்துகொள்ளும்வகையில்(இந்தியாவில் இதுபோன்ற ஆர்வமுண்டா[) நிகழ்ச்சிகளை நடத்தி வந்தவர்கள். இம்முயற்சியின் தொடர்ச்சியாக உலகின் பிற மொழிகளில் இன்றைய இலக்கியப் போக்கைத் தெரிந்துகொள்ள கடந்த சில ஆண்டுகளாக பிறமொழி எழுத்தாளர்களை அழைத்து அவர்கள் ஊடாக அவர்கள் நிகழ்வுக்கு மையப்பொருளாக உள்ள மொழியின் இன்றைய இலக்கியப் போக்கையும், அம்மொழி சார்ந்த மக்களின் பண்பாடுகளையும் அறிய முற்பட்டிருக்கிறார்கள்.
அந்த வழியில் இரண்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக ருமேனியா, அல்ஜீரியா எழுத்தாளர்களை அழைத்த வரிசையில் இவ்வருடம் இந்தியாவில் இத்தனைமொழிகளிருந்தும் தமிழைத் தேர்வு செய்திருக்கிறார்கள். பதினைந்து நாட்கள் இரண்டு சிறுநகரங்களில் நிகழ்ச்சிகள். தமிலக்கியம், தமிழ் பண்பாடு சார்ந்து நடக்க உள்ளன. பதினைந்து நாட்கள் அங்கு தங்க எனக்கு ஏற்பாடு செய்துள்ளனர். முதலில் மார்ச் மாத த்தில் நடப்பதாக இருந்த து. தற்போது மே இறுதிவாரம் ஓர் ஊரிலும், ஜூன் முதல் வாரத்தில் இன்னொரு ஊரிலும் நடக்கிறது.
பேராசாரியர் க. பஞ்சாங்கத்தின் தமிழ் இலக்கிய வரலாறு நூலை ஆதாரமாக க்கொண்டு நவீன தமிழ் இலக்கியம் பற்றி ஒரு கட்டுரை, புலம்பெயர்ந்த இலக்கியம் பற்றிய ஒரு கட்டுரை, பெண்கள் இலக்கியம் பற்றி ஒரு கட்டுரை, கோகிலா என்ன செய்துவிட்டாள், மோகமுள், ஜே.ஜே. சில குறிப்புகள், மானுடம் வெல்லும், சாயாவனம் முதலான நூல்களைப் பற்றிய அறிமுகம் என 20 பக்கங்களுக்கு கட்டுரைகள் பிரெஞ்சு மொழியில் எழுதி அனுப்பியிருக்கிறேன். நிகழ்ச்சியில் தமிழ் புலத்திலிருந்து சில நண்பர்களை காணொளி உரையில் கலந்துகொள்ள அழைக்கத் திட்டம். முழுக்க முழுக்க பிரெஞ்சு மொழியில் நடத்தப்படுவதால் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. என்னுடன் yanne Dimay என்ற பெண்மணியும் கலந்துகொள்கிறார். புதுச்சேரியை அறிந்தவர், எழுத்தாளர், 1958 – 1975 நாடக மேடைகளில் தோன்றியவர்.
நிகழ்ச்சியில் தமிழ் இலக்கியம் சார்ந்த உரையாடல், தமிழ், தமிழர் எனப்பேசுகிற புகைப்படக் கண்காட்சி தமி இலக்கியம் சார்ந்த நூல்கள் கண்காட்சி. மாலையில் தமிழநாடு சார்ந்த இசை, நடன ங்கள் என திட்டமிட்டுள்ளோம். நிக்ழ்ச்சி தொடங்குவதற்காக ஒவ்வொரு மாதமும் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை கலந்து பேசிவருகிறோம்.