Monthly Archives: ஜூலை 2020

மொழிவது சுகம் ஜூலை 30, 2020 : மாத்தாஹரி – எமிலி – ஹரிணி

மொழிவது சுகம்  ஜூலை 30 2020

மாத்தாஹரி நாவல் : எமிலி  –  ஹரிணி

மொழிவது சுகம் ஜூலை 30, 2020 : மாத்தாஹரி – எமிலி – ஹரிணி

மாத்தாஹரி நாவலில் இடம்பெறும் ஹரிணிக்கு ‘Le Parisien’ என்ற பிரெஞ்சு தினசரி செய்தியின்படி தற்போதைய வயது, 26

கடந்த் 17 செப்டம்பர் 1994 ஆ ஆண்டில் பாரீஸ் ஒர்லி விமான நிலையத்தில் தள்ளுவண்டியொன்றில் அநாதையாக விடப்படிருந்த குழந்தையைக் கவனித்த பிரெஞ்சுப் பெண்மணியொருத்தி காவலர்களிடம் தெரிவிக்கிறார். அன்றும், அதற்குப் பிறகும் தொலைத்தக் குழந்தையைத் தேடி பெற்றோர்கள் முன்வராத நிலையில், காப்பகத்தின் முயற்சிகளும் பலனளிக்காத காரணத்தால் அரசு காப்பகத்தில் குழந்தை வளர்ந்தது. பரிசோதனையில் குழந்தை ஆரோக்கியமாகவே இருந்தது. நன்கு பராமரிக்கப்பட்டும் வந்திருக்கிறது. மருத்துவ பரிசோதனை குறிப்பின்படி, குழந்தைக் கண்டெடுக்கப்பட்டபோது வயது 9 மாதங்கள்.

இன்றைய தினசரி (30-08-2020) செய்தியின்படி அவர் வளர்ந்த பெண், 26 வயது. ஒர்லி விமான நிலையத்தில் அப்பெண், தன்னைக் கண்டெடுத்தத் தேதியையே பிறந்தநாளாகவும் காண்கிறார். தொடர்ந்து முகநூல் பிற சமூக ஊடகங்கள் வழியாக தம் பெற்றோர்களை சளைக்காமல் தேடிவருகிறார். இப்பெண்ணை விமானநிலையத்தில் கண்டு குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்க காரணமாக இருந்த பெண்மணியைச் சமூக ஊடகத்தின் உதவியுடன் சந்திக்க முடிந்ததில் இருவருக்குமே மகிழ்ச்சி என தெரிவித்திருக்கிறார். Aix en Province province பகுதியில் வசிக்கிறார் என்கிற பத்திரிகைசெய்தியும் பிரான்சு நாட்டை அறிந்தவர்க்கு வியப்பூட்டலாம். காரணம் அவருடைய பிறப்பு ரகசியத்தின் மற்றொரு உண்மையோடு தொடர்புடைய பகுதி. ஆம் எமிலியின் பெற்றோரில் ஒருவர் இந்தியர் என்கிறது, மருத்துவச் சான்றிதழ்.

மாத்தாஹரி புனைவில் எமிலியை ஹரிணியாக மாற்றிய இரகசியம் இது். தோற்றம், 70களில் சென்னையில் கல்லூரிக்குச் செல்கிறபோது மாத்தாஹரி நூலாசிரியர் ஒவ்வொரு நாளும், வழியில் எதிர்கொள்கிற பெண்ணுக்குச் சொந்தமானது. மாத்தா ஹரி நாவலில் மட்டுமல்ல, கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, காஃகாவின் நாய்க்குட்டி, கடைசியாக வெளிவந்த இறந்த காலம் நாவல் அனைத்திலும் ஹரிணி வருகிறார், புனைவுகளை வழிநடத்த உதவுகிறார்.

மாத்தா ஹரி நாவலில் ஹரிணியின் பெற்றோர்கள் யாரென்று இறுதியில் தெரியவரும். எமிலிக்கும் அது நிறைவேறவேண்டும், என்பதுதான் அப்பெண்ணுக்கு ஒருவகையில் நன்றிக்கடன் பட்டிருக்கும் நூலாசிரியர் பிரார்த்தனை.

https://www.leparisien.fr/…/emilie-abandonnee-bebe-a-l-aero