” Cheryl’s mind turned like the vanes of a wind-powered turbine, chopping her sparrow-like thoughts into bloody pieces that fell onto a growing pile of forgotten memories”.
இருபத்தாறு வார்தைகள் ஒர் அரைப்புள்ளி, ஒரு புள்ளி என்ற மூன்று தகுதிகளின் அடிப்படையில் எழுத்தாளர் ஒருவருக்கு பரிசு கிடைத்திருக்கிறது. எழுத்தாளர் பெயர் சூ ·போண்டரி அமெரிக்காவின் விஸ்லான்சின் பல்கலை கழகத்தைச் சேர்ந்த பேராசிரியை.
கழகங்கள் அரசியலுக்கு வந்த பிறகு பேராசிரியர்கள் என்ற பெயரைக்கேட்டாலே சந்தேகிக்கவேண்டியிருக்கிறது. அசலான பேராசிரியர்கள் மன்னிக்கவேண்டும். சூ ·போண்டரி கதைக்கு வருகிறேன். இந்தப் பெண்மணிஓர் எழுத்தாளருங்கூட, அவர் எழுத்தைப் பாராட்டி Bulwer-Lytten 2011பரிசினைத் தந்திருக்கிறார்கள். எல்லா பரிசுகளையும்போலவே இப்பரிசினைத் தீர்மானிக்கும் தேர்வுகுழுவினரும் – கலிபோர்னிய மாநிலத்தைசேர்ந்த சான் ஜொசே பல்கலைகழகத்தைசேர்ந்தவர்கள்- தங்கள் பரிசுக்கென்று சில தகுதியை வைத்திருக்கிறார்கள்.
அதென்ன தகுதி?
புரிந்துகொள்ள Edward Bulwer-Lytton என்ற எழுத்தாளரை நாம் அறிந்திருக்க வேண்டும். அவர் பல நாவல்களுக்குச் சொந்தக்காரர், அதிலொன்று ‘The Last days of Pompei’. ‘it was dark and stormy night” என ஆரம்பிக்கும் நாவலின் முதல்வரி வாசகர்களுக்குச் மிகுந்த சோர்வினைத் தரக்கூடிய மோசமான வரியாம். மிக மோசமான எழுத்து என தீர்மானிக்கப்பட்டு 1982ம் ஆண்டு புல்வெர்-லிட்டன் பெயரில் ஆரம்பிக்கப்பட்டக் கணக்கு, இப்பொழுது பரவலாக்கப்பட்டுள்ளது. மோசமான வரியை எழுதியவர் என்றவகையில் ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பு இப்பரிசினை வென்றிருப்பவர்தான் சூ ·போண்டரி. ஆரம்பத்தில் சொல்லப்பட்ட வாக்கியத்தைப் படித்துபாருங்கள். தேர்வுக்குழுவினர் காணும் குறை, ‘புனைவில் வரும் நாயகியின் மனதை காற்றாலையாகவும், நினைவுகளை அவற்றில் அடிபட்டு சிதறும் மைனாக்களோடு’ ஒப்பிட்டிருப்பது. பரிசுகொடுக்க நேர்ந்ததில் பொருத்தப்பாடிருப்பதாகச் சாதிக்கும் சூ இலக்கியம் போதிக்கும் பெண்மணிக்கு இப்படியான தகுதியும் ஒருவகையில் அவசியம் என்கிறார். சூ ·போண்டரி மனத்திடம் கொண்டவராக இருக்கவேண்டும், வேடிக்கையாக இம்முடிவை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
————————————————————————-