முகப்பு

வணக்கம் நண்பர்களே!

பரந்து பட்ட அனுபவங்களை, உள்ளத்தால் உணர்ந்தவைகளை, பிறர் மகிழ சொல்லத்தெரிந்தவன் கதை சொல்லி; உரிய சொற்களை வாக்கியங்களில் இடத்தெரிந்து, அப்படி இடத்தெரிந்ததால் உருவான சொற்களும் வாக்கியங்களும் ஒருபடித்தான தனித்தன்மையைக்கொண்டவையாயும் இருப்பின் அவ்வெழுத்துக்கு உடையவன் எழுத்தாளன்; மேற்கண்ட இரு பண்புகளோடு ஒரு பனுவல், வாசிப்பவனிடத்தில் சிந்தனை தாக்கத்தையும் ஏற்படுத்துமெனில் பனுவல் படைப்பாகிறது, படைப்பவன் படைப்பாளியாகிறான்.

ஒரு படைப்பாளனாக அல்ல; ஒரு  எழுத்தாளனாகவுமல்ல; ஏன் ஒரு கதைசொல்லியாககூட அல்ல;  ஒரு வாசகனாக எனது வாசிப்பு மற்றும் வாழ்க்கை அனுபவங்களை இலக்கிய விசுவாசிகளோடு பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற காதலால் இத்தலம் தொடங்கப்பட்டது.

என்னைப்பற்றிய ஒரு உண்மையையும் உங்களிடத்தில் சொல்லிவிடவேண்டும். தாய் மொழியைக்காட்டிலும் இலக்கிய மொழியென்றால் விருப்பம் அதிகம், அது தமிழில் சொல்லப்பட்டிருந்தால் கூடுதல் விருப்பம்.

அன்புடன்
நா.கிருஷ்ணா

9 responses to “முகப்பு

  1. இலக்கியத்தை மொழிகடந்ததே உயிரின் காற்றாய்
    ஏற்றியங்கும் இதயத்தீா் வணக்கம்! நன்றே
    உளம்வளத்தைப. பெறுகின்ற நுால்கள் தீட்டி
    உளா்வளத்தைத் தமிழுக்குச் சோ்த்தீா்! வாழும்
    நிலம்எழுத்தை மொழிபெயா்த்துத் தமிழின் ஏட்டில்
    நிலைபெற்றீா்! இரத்தினமாய் மின்னும் உங்கள்
    வளம்எழுத்தை வலைப்பதிவில் கண்டு உவந்து
    வாழ்த்துகின்றேன்! தமிழ்பரப்பி வாழ்க நீடே!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    30.07.2011

    வாழ

  2. எஸ்.ரா வலை மூலம் தங்கள் வலை அறிந்தேன். மகிழ்ச்சி. வாழ்த்துகள். பணி தொடரட்டும்.

  3. எஸ்.ரா வலை மூலம் தங்கள் வலை அறிந்தேன். மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  4. தங்களின் இரண்டு நாவல்கள் மாத்தாஹரி ,கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி படித்தேன்.மாத்தாஹரி இலக்கிய கலாரசிகர் கி. அ. சச்சிதானந்தம் அவர்களின் பரிந்துரை பேரிலும் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி மாத்தாஹரி தந்த வாசக அனுபவத்தின் பேரிலும் . மிக அற்புதமான படைப்புகள்.தொடரட்டும் தங்கள் பணி

  5. தங்கள் வலைதளத்தை இன்று தான் வலம் வந்தேன். அருமை. தொடரட்டும் உங்கள் தமிழ் இலக்கியப் பணி.

    கிருஷ்ணா, மலேசியா

  6. வாழ்த்துக்கள்…

Mahendiran -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி