ஸ்பெய்ன் நாட்டின் ஒரு பகுதியாக சுய ஆட்சி உரிமை பெற்ற பிரதேசமாக நேற்றுவரைஇருந்த கட்டலோனியா இரண்டு நாட்களுக்கு முன்பு சுதந்திர நாடாக தம்மை பிரகடன படுத்திக்கொள்ள ஐரோப்பிய நாடுகளில் மட்டும்ல்ல உலக நாடுகள் பலவற்றிலும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெய்ன் நடுவரசு
– தங்கள் மொழியை ஆதரிப்பதில்லை
– தங்கள் பண்பாட்டை மதிப்பதில்லை
– தங்கள் திறனுக்கு ஆதரவாக இல்லை
– தங்கள் தனித் தன்மையை போற்றுவதில்லை
– எங்கள் வரிப்பணத்தை , எங்கள் வளத்தை எங்களுக்குப் பன்படுத்துவதில்லை
என்ற 300 ஆண்டுகால குமுறல் அவர்களை இனியும் ஸ்பெய்ன் நாட்டோடு இணைந்து வாழ முடியாது என அறிவிக்கக் காரணமானது.
ஸ்பெய்ன் அரசு பிரிவினைய அனுமதிக்க மாட்டோம் என அறிவித்து இதுவரை கட்டலோனியா பிரதேசம் பெற்றிருந்த சிறப்பு உரிமைகளைத் திரும்ப ப் பெற்று, சுதந்திரவாதிகளின் அரசாங்கத்தையும் கலைத்துவிட்டுத் தன்னுடைய நேரடி அதிகாரத்தின் கீழ் கட்டலோனியாவைக் கொண்டு வந்திருப்பதாக அறிவித்துள்ளது.
காந்தியப் பாதையில் ஒத்துழையாமை இயக்கத்திற்கு கட்டலோனி மக்கள் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஜன நாயகம் பற்றி வாய்கிழிய பேசும் அமெரிக்கா முதலான மேற்கத்திய வாடுகளும் சரி, உலக சர்வாதிகார அரசுகளும் சரி கட்டலோனியா வின் நிலைப்பாட்டை ஆதரிப்பவைகள் இல்லை, கொள்ளிக்கட்டையை எடுத்து முதுகை சொரிந்துகொள்ள யாருக்குத் துணிச்சல் வரும். வெகு காலம் ஏகதேசம் என்ற கோட்பாட்டின் கீழ் இருக்கும் எந்த மக்களும் தங்கள் தனித் தன்மையை , பண்பாட்டை, மொழியை கட்டிக்காப்பது எளிதல்ல. கட்டலோனியாவில் இன்று கட்டலோனியா மக்கள் மட்டுமில்லை ஸ்பெய்ன் நாட்டின் பிற பகுதி மக்களும் வசிக்கிறார்கள். இவர்கள் நாம் நினைப்பதுபோலவே கட்டலோனியா மக்களுக்கு எதிரான நிலப்பாடு கொண்டவர்கள். பிறகு கட்டலோனிய மக்களிலேகூட ராமன் ஆண்டாலென்ன லட்சுமணன் ஆண்டாலென்ன, நம்ம மொழி சோறுபோடுமா, என்று வாதிடுகிற கூட்டமும் இல்லாமலில்லை. ஆக உள்ளே வெளியே என எல்லா முனைகளிலும் வென்றெடுக்க வேண்டிய நெருக்கடியில் கட்டலோனியா சுதந்திரவாதிகள்
எதிர்காலத்தில் உலகில் தனி நாடு என்ற கோரிக்கையின் தலை எழுத்து கட்டலோனியாவின் தலை எழுத்தை நம்பியே இருக்கிறது.
—————