அக்கினி காரியம் !

அக்கினி காரியம் !

எரிதலும் எரித்தலும்
எங்களுக்குப் புதிதல்ல
இலங்கை, மதுரை
உடன்கட்டை ஏற்றல்
மொழிப்போர்
பேருந்து, போன்ற
பொதுவெளிகள் அன்றி
வீட்டிலும் ஸ்டவ்வை வெடித்து
வேகும் உயிர்கைளை
வேடிக்கைப் பார்பது
ஒரு பொழுதுபோக்கு !

கழுதைக்கு
கற்பூரம் காட்டி
அசுவமேத யாகம்
நடத்தும் அரசு !
விழுதைப் பாம்பென்று
சாதிக்கும் அறிவுஜீவிகள் !

எழவு வீடோ,, திருமணமோ !
எச்சில் இலைகள் எங்கிருந்து
விழுந்தாலென்ன
தெரு நாய்களுக்கு
விருந்து முக்கியம்.

வட்டி கட்ட முடியாமல்
வாழ்வைத் தொலைத்ததாகக் கேள்வி
இனி வட்டியுடன்
அசலும் கேமரா சகிதம்
வீடுதேடிவரும்.

எரித்துக்கொள்வதற்கு முன்
பாவி –கொஞ்சம்
யோசிக்கவேண்டாம் ?
அதற்கென்றாவது உங்களில்
ஒருவர் வாழ்ந்திருக்கலாமே !

ஒருவேளை
அரசியல்வாதிகளும்
கந்துவட்டிகாரர்கள் என்ற அச்சமா ?
சீச்சி இவர்கள் ஐந்தாண்டுகள்
காத்திருப்பார்கள் !

 

–  நாகரத்தினம் கிருஷ்ணா

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s