அ. தமிழருவி மணியன்
« காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் தேர்தல் களத்தில் நின்ற வேட்பாளர்கள் இரண்டாயிரம் வாக்குகளைக் கூடப் பெற முடியாமற் போனால் நான் பொது வாழ்வில் இருந்து முற்றாக விலகி விடுவேன் என்று அறிவித்திருந்த படி இந்த முடிவை நான் மேற்கொண்டிருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து கவிஞர் கண்ணதாசன் பிரிந்த போது “போய் வருகிறேன்” என்று எழுதினார். ஆனால் நானோ இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை அரசியல் உலகத்தில் மீண்டும் அடியெடுத்து வைப்பதில்லை என்ற முடிவுடன் போகிறேன். காந்திய மக்கள் இயக்கத்தின் எதிர்காலத்தை அதனுடைய நிர்வாகிகள் கூடி நிர்ணயம் செய்வார்கள் » – அரசியலிலிருந்து விலகிய தமிழருவி மணியன் விடுத்துள்ள செய்தி.
காந்தியே தேர்தலில் நின்றதில்லை என்கிறபோது காந்திய மக்கள் இயக்கம் தேர்தலில் ஆர்வம் காட்டியது தவறு. தமிழருவி மணியன் நேர்மைகுறித்து கேள்விகள் இல்லை. பிரச்சினை நேர்மையை பெரும் எண்ணிக்கையில் மக்களிடம் எதிர்பார்த்தது. உலகமெங்கும் இதுதான் உண்மை. தமிழ்நாட்டில் அந்த விழுக்காடு 95 சதவீதம் இருக்கலாம், மற்றபடி எங்கும் இப்பிரச்சினை இருக்கிறது. மக்கள், மீடியாக்கள், அறிவு ஜீவிகள் என அனைவருக்கும் இங்கு வேறு நிறம். தவிர காந்திகூட தேர்தலை நம்பி அர்சியல் செய்யவில்லை, அவர் அடிமைப்பட்டுகிடந்த இந்தியாவில், வெறும் மேடை பேச்சுடன் ஒதுங்கிவிடாமல் களத்தில் இறங்கி, வெகு சனத்துடன் கலந்து அரசியல் செய்தவர். குறைகாண்கிற பாமரமக்களிடம், காந்திபோல காமராஜர்போல நம்பிக்கை பெறுவதற்கு தமிழ்அருவி மணியன் செய்ததென்ன ? ஜெயித்தவர்களைப் பாமரமக்கள் மட்டுமே வாக்களித்துத் தேர்ந்தெடுத்தார்களா என்ன ? கவிஞர் சுயம்புலிங்கம் சொல்வதுபோல : ஐம்பது பைசாவிற்கு கால் மடக்கி கையேந்துகிற ஆனைகள் நம்மிடம் அதிகம்.
மணியன்கள் போகட்டும் சார். ஒத்தப் பிரச்னைக்கு பிரயோசனம் இல்லாத பேர்வழிகள்.
Yes, it’s not a easy path ahead..