புது தில்லியில் அண்மையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக அண்டை வீட்டுக்காரரான சீனாவை இந்தியா அழைத்திருந்தது. சீனாவுக்கும் இந்தியாவுக்குமுள்ள ஏழாம் பொருத்தம் தெரிந்ததுதான். வீட்டிற்கு அழைத்து விருந்தே போட்டாலும் கை கழுவிகிறபோது விருந்து விஷமாகிப் போவது இன்று நேற்றல்ல நேரு காலத்திலிருந்து தொடரும் உண்மை. சீன அதிபர் Xin Jinping இந்தியா வந்திருந்தபோது , இந்திய அரசு இந்த அழைப்பை விடுத்திருக்கிறது. ஏற்றுக்கொண்ட சீனாவும் 8 எழுத்தாளர்கள் 81 பதிப்பகங்கள் என கலந்துகொள்ள விழாவும் களைகட்டியிருக்கிறது. யார் கண் பட் டதோ இருதரப்பும் கசப்புடன் பிரியும்படி ஒரு சம்பவம்.
தாகூரின் Stray Birds (திசையற்ற பறவைகள்) கவிதை சீனமொழியில் வந்திருக்கிறது. மொழி பெயர்ப்பாளர் சீனமொழியில் பிரபல வெகுசன எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமாக சமீபக் கால த்தில் புகழடைந்துள்ள Feng Tang என்ற இளைஞர்.
அக்கவிதையில்
“காதலனுக்காக உலகு, தனது பெருவெளி முகமூடியைக் களைகிறது” –
(The World puts off its mask of vastness to its lover) என்று ஒரு வரி வருகிறது
இதனை சீனமொழியில் மொழிபெயர்த்தவர் அதாவது Feng Tang:
“உலகம் , காதலனுக்காக, தனது பெருவெளியை மறைத்திருந்த உள்ளாடையைக் களைகிறது”
என்று தந்திருக்கிறார். அதாவது
“ Le monde, pour son amant, retire son masque d’immensité ”
என்றிருக்க வேண்டியதை
“ Le monde, pour son amant, retire les sous-vêtements recouvrant son immensité. ”
என பிரான்சு நாட்டின் தினசரி ‘ Le Monde’ சொல்கிறது.
இத்தவறை சீன வாசகர் ஒருவர் கண்டறிந்த ஏதோ ஒரு தினசரிக்கு எழுத ( கடந்த டிசம்பர் மாதம் ) ஒரு சில சீன இதழ்களும் இதனைப் ‘ பண்பாட்டு பயங்கரவாதம்’ என வர்ணித்ததோடு , மொழிபெயர்ப்பாளரை வக்கிரமான ஆசாமியென கண்டிக்கவும் செய்தன.
அதேவேளை மொழிபெயர்ப்பாளர் தான் மொழிபெயர்த்த து சரியே என வாதிப்பதாகவும், அபருக்கு ஆதரவாக சில சீன இதழ்களும் எழுத்தாளர்களும் இது மொழிபெயர்ப்பாளர் உரிமை எனவும் வாதிக்கின்றன.. இருந்த போதும் எதற்குப் பிரச்சினையென சீன பதிப்பகம் பதிப்பித்த கவிதைத் தொகுப்பைத் திரும்பப்பெற்றிருக்கிறது. பதிப்புரிமையைச் சீனர்களுக்குத் தந்த இந்திய பதிப்பாளரும் ‘Nyogi Books’ – உரிமையாளருமான Bikash Nyogi « வங்க்காள மொழியிலிருந்து ஆங்க்கிலத்திலும், ஆங்க்கிலத்திலிருந்து சீன மொழிக்கும் சென்றதால் இது மொழிபெயர்ப்பில் தவறு நிகழ்ந்து விட்ட து « – என சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கிறாராம்.
நன்றி Le Monde 21 -1-2016
இதில் இவ்வளவு அரசியல் இருக்கிறதா?