கடந்த ஒருவருடமாகவே நச்சரித்து வந்தார் . நானும் பிடிகொடுக்காமல் நழுவிவந்தேன் . இறுதியில் பிடிவாதம் ஜெயித்தது. பிடிவா த த் தி ன் பெயர் மு . அரிகிருஷ்ணன் பல படைபாளிகளோடு என்னையும் களரி கலை இலக்கியம் மற்றும் கூத்துகலைஞர்கள் ஆதரவு அமைப்பு சேலம் அருகே ஏர்வாடி கிராமத்தில் ஏற்பாடு செய்திருந்த ஒரு நாள் நிகழ்விற்கு (2-1-16) அழைத்திருந்தார்கள். நண்பர் பஞ்சுவுடன் நானும் கலந்துகொண்டேன்
அரிகிருஷ்ணன் புஜக்கட்டையும் தலைக் கிரீடமுமாக இருப்பாரோ என எதிர்பார்த்தேன். இல்லை நட்சத் திர எழுத்தாளர்களில் ஆரம்பித்து முதற்படைப்பு சிற்றிதழில் வந்த சந்தோஷத்தில் திளைத்திருக்கிற இளம் படைப்பாளர்வரை இங்கே அனைவருக்கும் தங்கள் இருத்தலை கவனம் பெறச்செய்ய குறைந்தபட்சம் கீரிப்பிள்ளை பாம்புச் சண்டையையாவது களமிறக்குகிறபோது (இலக்கிய சேவைதான் நம்புங்கள்) தன் இருத்தலை கூத்துக் கலைஞர்களின் அடையாளத் தேடலில் செலவிடுகிற மனிதரை எப்படி எடுத்துகொள்வது?. அரசியலைப்போலவேஎழுத்திலும் விளம்பரமே கரைசேர்க்கும் என்ற சூட்சமத் தீவில் அரிகிருஷ்ணானும் சிக்கி இருக்கிறார் . எனினும் சேலம் மாவட்ட கூத்துக்கலைஞர்களை அமெரிக்க மண்ணில் கால்பதிக்க, கிராமியத் திடல்களில் அறுவடை நாட்களில் பின்னிரவுகளில் தோல்பாவை கூத்துகளில் ஒலித்த குலுரலுக்குரிய முகங்களை ஆங்கிலத் தினசரிகளில் இடம் பெற, பார்வையாளரிடமிருந்து பெற்ற ஐந்து ரூபாய் பத்து ரூபாய் சன்மானத்தைச் சாராயக்டையில் சேர்க்கும்வரை தொட்டுமகிழும் கைகள் முன் முறையாக விருதுகளையும் சான்றிதழ்களையும் காமெரா முன்பாக கையிற்பிடிக்க வாய்ப்பினை அளித்த அரிகிருஷ்ணனை நாம் மறந்தாலும் கூத்துக் கலைஞர்கள் மறக்கமாட்டார்கள் அரிகிருஷ்ணனோடு, அவருடைய குடும்பத்தினரும், நண்பர்களும், உறவுகளும் சொல்லப்போனால் கிராமம் முழுக்க பல மாதங்கள் சோர்வின்றி உழைத்கிறார்கள் என்பது நடந்த நிகழ்ச்சிகள் மூலம் தெரியவந்தன.
அரிகிருஷ்ணன் பணி அரியப் பணி . தற்போது தமிழ் நாட்டில் கலை இலக்கியதுறையில் இருக்கிறவர்கள் சென்ற தலைமுறையினர் இல்லை. ஆரோக்கியமான பொருளதார சூழலில் பெரும்பாலோர் இருக்கிறார்கள். அவர்கள் அரிகிருஷ்ணன் போன்றோரின் முயற்சிக்குத் துணை நிற்கிறார்கள். சாகித்ய அகாடமி அளித்த விருதையும் பணத்தையும் சுயமரியாதையுள்ள நமது எழுத்தாளர்கள் திருப்பித் தாராமற் போனதன் காரணம் அவர்கள் ஒருவேளை அரிகிருஷ்ணன் போன்றவர்களுக்கு உதவுவதாக இருக்கலாமென என்னுடன் வந்த நண்பர் ஒருவர் கூறினார். கலை இலக்கியதுறை சார்ந்த மனிதர்கள் பிரச்சினையில் உழல அதைப் பார்த்துகொண்டிருக்க எப்படி அவர்க ளுக் கு மனம் வரும்? ஆக இனி நலிந்த எழுத்தாளர்களுக்கு பிரச்சினை வராமற் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பரிசு பெறும் எழுத்தாளர்களைச் சேர்ந்தது என்பதைக் கேட்க இனிமையாக இருக்கிறது.
————————————————————–
can i have u r phone number pls