இந்த ஆண்டு மேலும் இலக்கிய விமர்சன விருதினை பேராசிரியர் க.பஞ்சுவிற்கு அளித்து பெருமை சேர்த்திருக்கிறார்கள். பேராசிரிரை அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள், அனைவருக்கும் மகிழ்ச்சியானதொரு செய்தி. மேலும் பலவிருதுகளைப்பெற மனமார வாழ்த்துகிறோம். பேராசிரியர் தமிழவனுக்கும் ‘மேலும்’ இலக்கிய நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
நிகழ்ச்சிகுறித்த விவரம் கீழ்க்கண்ட அழைப்பிதழில் உள்ளது. நேரில் அழைத்ததுபோலக்கருதி நண்பர்கள் விழாவைச் சிறப்பிக்க வேண்டும். பஞ்சுவைக் கௌரவிப்பது தமிழைக் கௌவுரவிப்பதுபோல.
பணிவுடன்
நா.கிருஷ்ணா, வே சுப.நாயகர், சீனு தமிழ்மணி