1தமிழர்கள்
A. புதுச்சேரி நகரசபை
B. உ.வே.சா. இல்லம்
நன்றி: தி இந்து
2. விகடன் எஸ். பாலசுப்பிரமணியத்தின் மறைவு
விகடன் குழுமத்தின் தலைவர் பாலசுப்பிரமணியத்தின் மறைவுச் செய்தியை ‘தி இந்து’ வில் வாசிக்க நேரந்தது. அவரின் பெருமைகளை பட்டியலிட அவசியமில்லை வெகுசன இதழ்கள் இன்றைக்கு நவீன இலக்கியத்தைபரவலாக அறியக் காரணமானவர். தமிழர்களின் பாமரத்தனமான கலை இலக்கிய இரசனையை உயர்த்தியதில் பெரும் பங்கு ஆற்றியிருக்கிறார். இலக்கிய வட்டம் மட்டுமே அறிந்திருந்த படைப்பாளிகளை வெகுசன மேடைக்கும் கொண்டு சென்றவர். தி இந்து தமிழ் தினசரி அவரைக் குறித்து எதைச் சொல்லவேண்டுமோ அதை நன்றாக எழுதியுள்ளது. ஆனால் அவரை சிறையில் அடைத்து பெருமைபெற்ற முதலமைச்சரையும் அவரது கட்சியையும் எழுதும் வேளையில் மறதி குறுக்கிட்டிருக்கிறது.
3. பாரீஸில் அம்பை
உயிர்நிழல் லட்சுமி நவம்பர் மாதத்தில் அம்பைக்கு ஒரு நிகழ்வை பாரீஸில் ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவித்தார். பின்னர் அந்நிகழ்வு டிசம்பர் 13 அன்று நடப்பதாக தகவல் வந்தது. புதுச்சேரி நண்பர்களுக்கும் தெரிவித்தேன். இதே பகுதியில் அந்நிகழ்வு பற்றி குறிப்பிட்டிருந்த அறிவிப்பில் தேதி உள்ளது, ஆனால் அதனை புதுச்சேரி நண்பர்களுக்குத் தெரிவித்தபோது தேதியைக் குறிப்பிட தவறி இருக்கிறேன். உண்மையில் அக்கறை இருப்பவர்கள் எழுதிக் கேட்பார்கள் என்று நினைத்தேன். அந்த நல்ல காரியத்தைச் செய்தவர்கள் ஒன்றிரண்டுபேர்தான். அவர்களிலும் கலந்துகொண்டவர் நண்பர் முத்துகுமரன் மட்டுமே. அவர்கூட அம்பை எழுத்துக்களைப் படித்திருக்க வாய்ப்பில்லை. முத்துக்குமரன் தவிர பிரெஞ்சில் சிறுகதைகள் எழுதிவரும் மத்மசல் ‘மிரெய் சாந்த்தோ’வும் காந்தியைக்குறித்து அண்மையில் புத்தகமொன்று எழுதியுள்ள திரு ஜோசெப் தம்பியும் வந்திருந்தார்கள். ஏற்பாடு செய்திருந்த இடத்தைக் கண்டுபிடிப்பது பெரும்பாடாக இருந்தது. நண்பர்கள் மத்மசல் மிரெய் மற்றும் ஜோசெப் தம்பி இருவரும் ‘தேடல்’ இக்கட்டிலிருந்து என்னைக் காப்பாற்றினார்கள். அவர்கள் உதவவில்லையெனில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமலேயே திரும்பியிருப்பேன். ஒருவழியாக அங்குபோய்ச்சேர்ந்தபோது நிகழ்ச்சி ஆரம்பித்திருந்தார்கள். அம்பை இன்னும் பேசத்தொடங்கவில்லை என்பது ஆறுதலாக இருந்தது. இங்கே ஒன்றை குறிப்பிட்டாகவேண்டும் அம்பையை வாசிக்காத முகங்களே இடத்தைப் பிடித்திருந்தன. வாசித்திருக்கக்கூடும் என்று நம்பிய இலங்கைத் தமிழ் எழுத்தாள நண்பர்களையும் காணமுடியவில்லை. அம்பையின் பேச்சு monotonous ஆக இருந்தது. பெண்ணியம் குறித்து புதிதாக ஏதேனும் அவருக்குச்சொல்ல இருக்கலாம் என்று சென்ற எனக்கு பெரும் ஏமாற்றம்.
4. நண்பர் பெஞ்சமின் லெபொவுடன் சந்திப்பு
அம்பையின் வரவு குறித்த செய்தியை பிற புதுச்சேரி நண்பர்களுக்குத் தெரிவித்ததுபோன்றே அவருக்கும் தெரிவித்தேன். ஒருவருடத்திற்கு முன்பு தான் இதயச்சிகிச்சை பெற்றதைக்குறிப்பிட்டு தற்போது அதிகம் வெளியிற் செல்வதில்லை என மடலிட்டிருந்தார். எனவே அவரைப் பார்த்துவிட்டு வரலாம் எனச்சென்றேன். தெளிவாக முகவரியைக் குறிப்பிட்டிருந்தார், இடத்தைக் கண்டுபிடிப்பதில் எவ்விதச் சிக்கலுமில்லை. இந்த வயதில் எதிர்பார்க்கக்கூடிய பிரச்சினைகள்தான். உற்சாகமாக, எப்போதும்போல சுவாரஸ்யமான உரையாடலைத் தொடங்கினார். அறிவு ஜீவிதத்துடன் கூடிய தமிழ்த் தம்பதிகள் பிரான்சில் அபூர்வம். பெஞ்சமின் தம்பதிகள் விதிவிலக்கு. ஒரு மணிநேரம் இலக்கியம், தமிழ்நாடு, தமிழர்கள் என்று பேச்சு இருந்தது. அம்பை நிகழ்ச்சி இல்லையெனில் கூடுதலாக ஒருமணி நேரம் பேசிவிட்டு வந்திருக்கலாம். சகோதரிகள் திருமதி சிமோன் – திருமதி லூசியா லெபொ பொறுப்பேற்று நடத்தும் வலைத்தளத்தில் நண்பர் பெஞ்சமின் லெபொ (எழிலன்) எழுதியுள்ள பாரீஸ் பாதாளசாய்க்கடைகள் கட்டுரை அவசியம் வாசிக்க வேண்டியது:
http://francekambanemagalirani.blogspot.fr/
————————————————————
அன்பிற்கினிய நண்பருக்கு வணக்கம். தங்களின் முன் மடல் வந்ததும் உடடியாகப் பதில் எழுத இயலாத நிலை. பொறுத்தருள்க!
‘மொழிவது சுகம்’ படித்தேன் ; அதில் தாங்கள் மொழிந்தவை அறிந்து பெரிதும் மகிழ்ந்தேன். குறிப்பாக நம் சந்திப்பைச் சுருக்கமாகவும் சிறப்பாகவும் குறிப்பிட்டு எழுதி இருந்தீர்கள்! நன்று, நன்று ; நன்றி, நன்றி!
நம் சந்திப்பு எனக்கு மகிழ்ச்சியோடு கூடிய நெகிழ்ச்சியைத் தந்தது. நாடிய நட்பினைத் தேடி வந்த தங்கள் பண்பு பெரிதும் பாராட்டத்த்தக்கது. தாங்கள் விடை பெற்றுச் சென்ற பின்பும் தங்கள் வரவும் உரையாடலுமே என் நெஞ்சில் வலம் வந்துகொண்டு இருந்தன. இதைத் தான் வள்ளுவர் “உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்” என்றார் போலும்!
வாழிய நம் நட்பு! நனி நன்றியன் பெஞ்சமின்
De : நாகரத்தினம் கிருஷ்ணா À : benjaminlebeau@yahoo.fr Envoyé le : Samedi 20 décembre 2014 7h40 Objet : [New post] மொழிவது சுகம் டிசம்பர் – 20 , 2014 #yiv7075112160 a:hover {color:red;}#yiv7075112160 a {text-decoration:none;color:#0088cc;}#yiv7075112160 a.yiv7075112160primaryactionlink:link, #yiv7075112160 a.yiv7075112160primaryactionlink:visited {background-color:#2585B2;color:#fff;}#yiv7075112160 a.yiv7075112160primaryactionlink:hover, #yiv7075112160 a.yiv7075112160primaryactionlink:active {background-color:#11729E;color:#fff;}#yiv7075112160 WordPress.com | nagarathinamkrishna posted: “1தமிழர்கள் A. புதுச்சேரி நகரசபைB. உ.வே.சா. இல்லம்நன்றி: தி இந்து 2. விகடன் எஸ். பாலசுப்பிரமணியத்தின் மறைவு விகடன் குழுமத்தின் தலைவர் பாலசுப்பிரமணியத்தின் மறைவுச் செய்தியை ‘தி இந்து’ வில் வாசிக்க நேரந்” | |