கடந்த ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி நண்பர் பஞ்சாங்கம் பாரீஸ் வந்திருந்தார். ஏப்ரல் பன்னிரண்டு அன்று பாரீஸ் நகரில் உள்ள திருவள்ளுவர் கலைக்கூடம் நடத்திய பத்தாவது ஆண்டுசிழாவில் கலந்துகொண்டு ‘திருக்குறளும் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியும் என்ற தலைப்பில் உரையாற்றினார். விழாவில் அவரது பொறுப்பில் தயாரான சங்க மலரையும் வெளியிட்டார். மலருக்கு அரும்பணி ஆற்றிய நண்பர்கள் சீனு தமிழ் மணிக்கும், வெ.சுப.நாயக்கருக்கும் இங்கே நன்றியை நினைவு கூர கடமைப்பட்டிருக்கிறேன். இதுநாள்வரை இங்குள்ள எந்த அமைப்பும் அப்படியொரு செறிவான இலக்கிய தரமிக்க மலரை நான் அறிந்தவரை இதற்கு முன்பு பாரீஸில் வெளியிட்டதில்லை. வருங்காலத்தில் அது சாத்தியமாகலாம்.
நண்பர் பஞ்சாங்கம் Strasboourgல் விருந்தினராக வந்திருந்தார். இருந்தது சில நாட்களே என்றாலும் இதயத்திற்கு நிறைவைத் தந்த நாட்கள். இங்கிருந்து சுவிஸ் மற்றும் ஜெர்மன் அழைத்து சென்றிருந்தேன். பின்னர் ஏப்ரல் பதினெட்டு அன்று இரயிலில் பாரீஸ் அனுப்பிவைத்தேன். திருவள்ளுவர் கலைக்கூட நண்பர்கள் அவரை 20 அன்று வழி அனுப்பிவைத்தனர். சில ஒளிப்படங்கள் நண்பர்களுக்காக: