அன்பினிய நண்பர்களுக்கு
ஜனவரி 11 அன்று இந்தியா வருகிறேன்- செல்கிறேன். நண்பர்கள் அவரவர் வசிப்பிடத்திற்கேற்ப இரண்டிலொரு வினைச்சொல்லை பயன்படுத்திக்கொள்ளலாம். இடையில் ஒருவாரம் மனைவியுடன் இந்தியத் தலைநகருக்குச்செல்கிறேன். நண்பர் நாயகரும் அவர் துணைவியாருடன் வருகிறார்கள். ஜனவரி 26ந்தேதி புதுச்சேரியில்’கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நூல் வெளியீடு. இதர நாட்கள் புதுச்சேரி, சென்னையென தங்க நேரிடும். அவ்வப்போது வலைத்தளத்திற்கு வந்தும்போவேன். கடந்த மூன்றுமாதமாக சிற்றிதழ்களுக்கென்று எழுதவில்லை. எழுதவேண்டும். சிறுகதைக் கங்குகள் ஒன்றிரண்டு உள்ளத்தில் கனன்று கொண்டிருக்கின்றன, காலச்சுவடுக்காக லெ.கிளேசியோவின் ‘விசாரணை’ என்ற நூலை மொழிப்பெயர்க்கத் தொடங்கியிருக்கிறேன், மார்ச்சுக்குள் முடிக்கவேண்டும். ஏப்ரலுக்குள் எனது நிறுவனத்தின் ஆண்டுகணக்கை முடித்து சமர்ப்பிக்க வேண்டும், ஆடிட்டரிடம் கொடுக்கும் அளவிற்கு பெரிய நிறுவனமுமல்ல. தவிர கடந்த இருபது ஆண்டுகளாவே கணக்கு வழக்குகளை நானே பார்க்கிறேன். நாமே கணக்குவழக்குகளைப் பார்க்கிறபோது, திட்டமிட்டு எதையும் செய்ய முடிகிறது. பகுத்தறியும் மனிதர்கள் அதிகம் புழங்கும் எழுத்துலக நிழலில் ஒதுங்க முடிந்தது எனக்குக் கிடைத்த வரம். தொடர்ந்து ஆதரவளித்துவரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இந்நன்றிக்கு முதற்காரணம் நீங்கள் என்னைவிட மேலானவர்களென்று மனம் சொல்கிறது, நம்புகிறது.
வணக்கத்துடன்
நா.கிருஷ்ணா