பத்திரிகைகளப் பிரித்தாலும், சஞ்சிகைகளை வாசித்தாலும், தொலைகாட்சிகளிலும் இந்தியாவில் 90 விழுக்காடுகள் கெட்டதே நடப்பதுபோன்று சித்தரிக்கப்படுகின்றன. சினிமா, அரசியல், ஊழல்கள், விபத்துகள் மற்றும் பிற அழுக்கான சாக்கடைகளைத் தவிர்த்துவிட்டு வாரத்திற்கொரு முறை அல்லது மாதத்திற்கொருமுறை உங்கள் தெருவிலோ, ஊரிலோ, நகரிலோ ஆரவாரமின்றி பொது நலனுக்கென்று உழைக்கிற நண்பர்கள், மனிதர்கள் இருக்கக்கூடும், அவர்களைப் பாராட்டி முக நூலில் எழுதுங்களேன். வருடத்திற்கொருமுறை அவரில் ஒருவரை தேர்வு செய்து கௌரவப்படுத்தலாமே. அண்மையில் தொடர்ந்து ஆனந்தவிகடன் இதழால் அடையாளப்படுத்தப்படும் மனிதர்களால் ஏற்பட்ட ஆசை இது.
நா.கிருஷ்ணா