1. கதையல்ல வரலாறு -கட்டுரைகள்
வரலாறென்பது கடந்தகால உண்மை நிகழ்வுகள். வரலாற்றாசிரியர்கள் அரிச்சந்திரர்களாகவிருக்கக் கடமைப்பட்டவர்கள். ஆனால் அவ்வாறு இருக்கிறார்களா? வரலாறு என்று எழுதப்படைவையெல்லாம் உண்மைகள் மட்டும்தானா? இதுபோன்ற கேள்விகளை இத்தொகுப்பு எழுப்புவதோடு மட்டுமல்லாமல் உலகச் சரித்திரத்தின் சில முக்கியமான நிகழ்வுகளை மறு ஆய்வும் செய்கிறது.
கதையல்ல வரலாறு
ஆசிரியர் – நாகரத்தினம் கிருஷ்ணா
விலை -ரூ.80
நற்றிணை பதிப்பகம்
பழைய எண் 123 A, புதிய எண்243A
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை
சென்னை -600005
தொலைபேசி: 94861 77208/044 43587070
2. மொழிவது சுகம்: கட்டுரைகள்
அரசியல் இலக்கியம் சார்ந்து முன்வைத்த மனப்பதிவுகள். உயிரோசை, யுகமாயினி இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு.
மொழிவது சுகம்: கட்டுரைகள்
ஆசிரியர்: நாகரத்தினம் கிருஷ்ணா
விலை -ரூ 90
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
41. கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர்
சென்னை -600 011
தொலைபேசி: 25582552/0444640986
3. கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி – நாவல்
உலகிலேயே இனத்தால் மதத்தால் வேறுபட்ட ஆட்சியாளர்களின் வரலாற்றை பதிவு செய்திருக்கிற கோட்டை செஞ்சியாக மட்டுமே இருக்க முடியும். பாதுகாப்பான அரணென்ற நம்பிக்கையை ஆட்சியாளர்களுக்களித்த இக்கோட்டையின் முடிவைக் காலம் வேறாக தீர்மானித்தது. தஞ்சையும் மதுரையும் பேசாப்பொருளை செஞ்சி பேசுமென்று தோன்றிற்று. வரலாற்றிர்க்கு முடிவுமில்லை, ஆரம்பமுமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டோம். இருவருமாக இரண்டு ஆண்டுகாலத்திற்கு மேலாக நடத்திய மௌன உரையாடலை அதன் சம்மதமின்றி மொழிபடுத்தியிருக்கிறேன்.
கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி – நாவல்
ஆசிரியர் நாகரத்தினம் கிருஷ்ணா
விலை -ரூ 160
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53வது தெரு 9வது அவென்யு, அசோக் நகர்
சென்னை -600 083
தொலைபேசி 044: 24896979
———————————