1. நீர்மேல் எழுத்து சிறுகதைகள்
வணக்கத்திற்குரிய ரெ.கார்த்திகேசுவின் எழுத்துகளின் மீது எனக்கு எப்போதுமே மரியாதையுண்டு. அவருடைய சிறுகதைகளை மனம் ஒன்றி வாசிப்பேன். இச்சிறுகதை தொகுப்பில் 14 சிறுகதைகள் உள்ளன. மல்லி என்ற சிறுமியை மையமாக வைத்து நான்கு கதைகள். மூன்று அறிவியல் புனைகதைகள், பிற கதைகள் 7. இத்தொகுப்பிலுள்ள பெரும்பான்மையாக கதைகள், ரெ. கார்த்திகேசுவின் சிறுகதை எழுதும் திறனை உறுதிசெய்பவை. கதையின் முன்னுரையில் எழுத்திடமிருந்து விலகி அஞ்ஞாத வாசம் செய்ய முயன்று அது முடியாமற்போனதாக ஆசிரியர் தெரிவிக்கிறார். அவர் தொடர்ந்து எழுதுவாரென நம்புவோம்.
ரெ.கார்த்திகேசு நல்ல எழுத்தாளர் மட்டுமல்ல. சிறந்த விமர்கருங்கூட என்பதை நாம் அறிவோம். 2004ல் மித்ரா ஆர்ட்ஸ் அண்ட் கிரியேஷன்ஸ் சார்பில் விமர்சன முகம் 1 என்ற நூல் வந்தது இது இரண்டாவது. தமிழில் சார்பற்று, சொல்லவந்ததைத் தெளிவாக விமரிசன நோக்கில் முன் வைப்பவர்கள் குறைவு. ரெ.கார்த்திகேசு அவர்களில் ஒருவர். முதல் நூலில் இரண்டு பாகங்களுண்டு. முதல்பாகத்தில் மலேசிய தமிழ் இலக்கியம் குறித்து ஆழமாகவும் விரிவாகவும் 15க்கு மேற்பட்ட கட்டுரைகளிருந்தன. இரண்டாம் பாகத்தில் ஈழம், மற்றும் தமிழக எழுத்தா¡ளர்கள் இடம்பெற்றிருந்தார்கள்.
ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்குப்பிறகு வந்திருக்கும் விமர்சன முகம் -2ல் ஆசிரியர் இரா.முருகன், சை.பீர்முகம்மது, கழனியூரான், ஆ.ரெங்கசாமி, சீ.முத்துசாமி, காஞ்சனா தாமோதரன், திவாகர், இளஞ்செல்வன், ந.கோவிந்தசாமி, ப. சிங்காரம் என்று பத்து எழுத்தாளர்களின் நூல்களைக்குறித்த விமரிசனங்கள் இருக்கின்றன. இவற்றைத் தவிர ஆசியர் எழுத்தாள நண்பர்களின் நூல்களுக்கு எழுதிய முன்னுரைகள் என்ற வகையில் ஏழும், நண்பர்களுடனான கடித பரிமாற்றங்கள், நேர்காணல்கள் என பலவும் உள்ளன. இத்தொகுப்பை வாசித்து முடிந்தால் தமிழ் எழுத்துலகையே வலம் வந்த மன நிறைவு ஏற்படுகிறது. ரெ.கா. மலேசியாவின் பன்முகத்தன்மைகுறித்து அடிக்கடி எழுதிவந்ததை படித்துவந்திருக்கிறோம். இந்நூலிலும் அவ்வகையில் சில கட்டுரைகள் உள்ளன.
மேற்கண்ட ஒரு நூல்களையும் கோலாலம்பூர் உமாபதிப்பகம் மிக நேர்த்தியாக அச்சிட்டு ப்திப்பித்திருக்கிறார்கள். ஒவ்வொரு தமிழர்வீட்டிலேயும் இருக்கவேண்டிய நூல்.
ஆசிரியரின் இரு நூல்களும் கிடைக்குமிடம்
உமா பதிப்பகம்
85 CP Jalan Perhention, Sentul,
51100 KulaLumpur, Malaysia.
Tel.: 03- 40411617
Fax: 03-4044 0441
e.mail:umapublications@gmail.com
நாகி,
இந்த இரண்டு நூல்களையும் ஒரு சோதனை முறையில் மின்னூல்களாக்கி நூல் வர்த்தகத் தளமான Kobo Books தளத்தில் இட்டிருக்கிறோம். அந்தத் தளத்தின் search பகுதியில் தமிழிலேயே நூல்களின் தலைப்பை அல்லது ஆசிரியர் பெயரை இட்டுத் தேடினால் கிடைக்கும். நூல் ஒவ்வோன்றின் விலை $1.99. இதை விடக் குறைவாக விலை வைக்க Kobo Books அனுமதிக்கவில்லை.
நூல்களை மின்னூல்களாக வடிவமைத்தவர் முரசு மென்பொருள் நிறுவனர் முத்து நெடுமாறன். அவர் இல்லாமல் நானில்லை மின்னுலகில்.
உங்கள் அபிமானிகள் ஆதரிக்கக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
அன்புடன்
ரெ.கா.