கூடங்குள அணுமின் உலையை மூடுவவதற்கான வழிமுறையும் அசதா என்பவரின் கவிதையும்:
“http://mugaiyurasadha.blogspot.fr/”
அசதா என்பவரின் வலைப்பூவிலுள்ள “கூடங்குளத்து சாஸ்தா” வாசிக்கப்படவேண்டிய கவிதை. அண்மைக்காலங்களில் கவிதகள் மீது அதிகம் நாட்டமின்றி இருந்தவன், எந்திரத்தனமான உற்பத்திகளில் கலைஞனைக் காணாததால் ஏற்படும் சோகம் சகித்த முடியாதது. இக்கவிதை மனதிற்கு ஆறுதலாக இருந்தது.
அணுஉலை மின்சாரத்திற்கு ஆதரவானவன் நான் ஆனால் எனக்கு ‘நாராயண்சாமி’களைக்காட்டிலும் ‘உதயகுமார்’ போன்றவர்களின் மீது மரியாதையுண்டு. ஆனால் அணு உலைக்கு ஏன் ஆதரவளிக்கிறேன் என்பதை நண்பர்களுக்குச் சொல்லியாகவேண்டும்.
1. உலகில் அணுஉலையை வேண்டாமென முடிவெடுத்துள்ள நாடுகள் படிப்படியாக அதனைச் சார்ந்திருப்பதை குறைத்துக்கொண்டுவரவேண்டுமென்று சொல்கிறார்களேயன்றி நாளைக்கே மூடிவிடலாம் எனக்கூறுவதில்லை. இதில் பாதிப்படைந்த ஜப்பான், ரஷ்ய நாடுகளில்கூட அதுதான் உண்மை.
2. அணு உலையைக் காட்டிலும் மலிவான நம்பகமான மின்சார உற்பத்திமுறை தற்போதைக்கு இருக்கிறதா என்றால் இல்லை.
3. அணு உலையால் ஆபத்து என்ற கருத்தியம்: மறுக்கமுடியுமா என்ன? விபத்து நடந்தால் அப்பகுதியே புல் பூண்டற்று போய்விடும் என்கிறார்கள். யாரில்லை என்பது? ஆனால் இன்றைக்கு எங்கே ஆபத்தில்லை வாகனவிபத்தென்று பயணம் செய்யாமல் விடுகிறோமா? அல்லது விமான விபத்தென்று பறக்காமல் தவிர்ப்போமா? பத்திரமாக போய்ச்சேருவோம் என்ற நம்பிக்கையில்தான் காரில் ஏறுகிறோம். பாதுகாப்பான பயணமென்கிற உத்தரவாதத்தை நம்பியே விமானத்தில் பறக்கிறோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக விமான விபத்துகள் நடவாமலில்லை. பயணிக்காமல் இருக்கிறோமாவென்ன? அதுபோலத்தான் அணு உலை மின் தாயாரிப்பையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
முதலில் அணுமின்சாரம் வேண்டாம் என்கிறவர்கள் அதன் பயபாட்டை முற்றாக நிராகரிக்க வேண்டும். பிறவகை (அனல், புனல், காற்று…) மின்சாரங்களை மட்டுமே உபயோகிப்போமென அவர்கள் தீர்மானமாக இருக்கவேண்டும். சாத்தியமில்லையா காவிளக்கு உபயோகத்திற்கு மீண்டும் திரும்புகிறோம் எனச்சொல்லி வாழ்ந்து காட்டவேண்டும். நாமும் அவர்கள் போராட்டத்தை ஆதரிக்கலாம்.
ஆனால் இவ்விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் தந்திரமாக நடந்துகொண்டன. அண்மைக்காலங்களில் தமிழ்நாட்டின் அண்டைமாநிலங்களும் சரி இந்திய மத்திய அரசும் தமிழர் விரோத போக்கைக் தங்கள் நெறியாக கடைபிடிக்கிறார்கள். இந்நிலையில் கூடங்குளத்தை அணுமின்னுலையை மூடுவதற்கு ஒரு வழி இருக்கிறது. போராட்டக்குழு கூடங்குளம் மின்சார உற்பத்திமுழுவதையும் தமிழ்நாட்டிற்கு மட்டுமே வழங்கச் சொல்லவேண்டும், அப்படிக்கூறினால் இந்திய அரசு நாளைக்கே கூடங்குளத்தை மூடிவிடுவார்கள்.
————————–