அன்புடையீர்
எதிர்வரும் பிப்ரவரி மாதம் 5ந்தேதி மாலை ஆறுமணி அளவில் இந்திய பிரெஞ்சு பண்பாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் புதுச்சேரியில் சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளோம். இத்துடன் அழைப்பிதழை இணைத்திருக்கிறோம். நவீன தமிழிலக்கியத்தைச் சார்ந்த மூத்த பெருமக்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர். தாங்களும் விழாவில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்
நா.கிருஷ்ணா
அன்புள்ளத் தோழர் திரு.நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுக்கு,
இன்று இந்த கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். இரு மொழிகளுக்கிடையே இலக்கியப் பரிமாற்றம் செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட இக்கூட்டம் மிக சிறப்பாக இருந்தது. இது காலத்திற்கும் நிலைத்து நிற்கும் இலக்கியப்பணி என கருதுகிறேன். அவர்களை நாமும் நம்மைஅவர்களும் என கலாச்சாரப் பரிவர்த்தனைகள் நடக்கும் போது மனிதன் தன்னை இன்னும் நாகரிகமாக வளர்த்துக்கொள்ள ஏதுவானது நிறையே இருக்கும்.
வாழ்த்துக்கள்.
ஆரம்பத்திலேயே கருத்து மோதல்கள் உள்ள எழுத்தாளர்களை நீங்கள் சமாளித்துக் கொண்டுசென்ற போக்கு உண்மையில் சிறப்பான அனுகுமுறைதான். நிச்சயம் என்ன விதமான கருத்துமோதல்கள் ஏற்பட்டாலும் நிச்சயம் இன்று மேடையில் முன்வைத்தக் குறிக்கோளை நிச்சயம் அடைவீர்கள் என்ற நம்பிக்கையால் உங்கள் இயக்கத்தில்/அமைப்பில் உறுப்பினர்கள் சேர்க்கும்பட்சத்தில் அதில் சேர்ந்து நிச்சயம் ஒரு அணிலாக பங்கெடுக்கப்பேன்.
அன்புடன்
அரியநாச்சி
புதுவை.
வணக்கத்திற்குரிய அரியநாச்சி அவர்கட்கு,
எங்கள் அமைப்பின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மிகவும் நன்றி. தங்களைப்போன்றவர்களின் ஒத்துழைப்பின் பேரிலேயே இதனைக் கொண்டு செல்ல முடியும் என்ற புரிதலுமுள்ளது. அவசியம் தொடர்பு கொள்கிறோம்.
நா.கிருஷ்ணா