நூல்கள்

நாவல்கள்

1. சைகோன்-புதுச்சேரி நாவல்

கதைத் களத்திலிருந்து கிளைக்கும் எழுத்துக் கோபுரம் : “சைகோன் – புதுச்சேரிநாவலை முன்வைத்து…பேராசிரியர். க பஞ்சாங்கம்

 

சமீபத்தில் உலகப் புகழ்பெற்ற இயக்குநர் அகிரா குரசேவாவின் நேர்காணல் ஒன்றைத் தமிழ் மொழிபெயர்ப்பில் படித்தேன்; ஓரிடத்தில் ஒரு படத்தை இயக்குவதற்கு முன்னால் அந்தப் படத்தின் கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்த பிறகுதான் அதன் கதைமாந்தர்களுக்குப் பெயரிடுவது, நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுப்பது ஆகியவை குறித்து முடிவு எடுப்பேன் என்கிறார்; இதைப் படித்த கணமே இதைத்தானே இலக்கியப் படைப்பாக்கம் குறித்துப் பேசுகிற தொல்காப்பியரும் முதற்பொருள், கருப்பொருள் என்று முன் வைக்கிறார் என்ற எண்ணம் எனக்குள் ஓடியதால், அந்த நேர்காணலில் குறிப்பிட்ட அந்தக் கூற்று என் மறதிக்குள் சென்று மறைந்து விடாமல் எனக்குள் நிலைநிறுத்தப்பட்டு விட்டது; இதை ஏன் இங்கே சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்றால் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவும் படைப்பாக்கத்தின் மேன்மையான இந்த இரகசியத்தை அறிந்து செயல்படுபவராகத் தன் எழுத்துப் பயணத்தில் இயங்கியுள்ளார் என்பதைத் தெரிவிப்பதற்காகத்தான்.

முதலில் களத்தை –அதுவும் புதிய புதிய களத்தைத்– தேர்ந்தெடுப்பது, பிறகு அதன் மேல் நின்று கொண்டு எங்கெங்கோ சிதறிக் கிடக்கும் தகவல்களைத் தேடித் திரட்டித் தன்னுணர்வாக உள்ளிழுத்துத் தேக்கி வைத்துக் கொள்வது, தொடர்ந்து தேக்கி வைத்துக் கொண்டதைக் கதையாடலாக மொழிமயப்படுத்துவது என்று முப்பரிமாணத்தில் தன் புனைவெழுத்தை நடத்திக் காட்டுகிறார் கிருஷ்ணா; இதை இன்னும் கொஞ்சம் விரிவாகச் சான்றுகளோடு விளக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. அவருடைய முதல் நாவலான ‘நீலக்கடல்’ (2005), 16, 17ஆம் நூற்றாண்டுகளில் பிரெஞ்சுக் காலனியாக இருந்த மொரீசியஸ் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்ட புதுச்சேரிப் பிரெஞ்சு காலனிய மக்களின் வாழ்க்கைப் பாடுகளைப் பற்றிப் பேசுகிறது. மொரீசியஸ் தீவு என்ற, தமிழில் இதுவரை யாருமே தொடாத, புதிய களத்தில் காலூன்றிக் கொண்டு அந்த நாவல் நடக்கிறது. இது போலவே மாத்தாஹரி (2008), காஃப்காவின் நாய்க்குட்டி (2015), ரணகளம் (2018) ஆகிய நாவல்கள் பிரெஞ்சுக் காலனியாக இருந்த, புதுச்சேரியைக் களமாகக் கொண்டு ஐரோப்பா வரை நீளுகின்றன. கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (2012), நாயக்கர் காலச் செஞ்சியையும் புதுச்சேரியையும் களமாகக் கொண்டு இயங்குகிறது. இறந்த காலம் (2019) என்ற நாவல் புதுச்சேரிக்கு அருகில் இருக்கும் ‘ஆரோவில்’-ஐ இயங்கு களமாக அமைத்துக் கொள்ளுகிறது. இப்போது இந்த நாவல், –சைகோன் புதுச்சேரி– பிரெஞ்சு காலனியாக இருந்த இந்தோ சீனாவைத் (சைகோன்) தன்னுடைய புனைவு வெளிக்கான கதைக்களமாகக் கொண்டு ஒரு பேராறு போல நகர்கிறது.; ஒவ்வொன்றிலும் களத்தைத் தேர்ந்தெடுப்பதும், தகவல்களைத் திரட்டுவதும், தொடர்ந்து மொழிமயப்படுத்துவதுமென முப்பரிமாணங்களும் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய கிருஷ்ணாவின் இந்த எழுத்துப் பயணம் முழுவதிலும் நின்று செயல்படும் மற்றொரு முக்கியமான போக்கைக் கவனிக்க வேண்டும்; அதாவது அனைத்திலும் புதுச்சேரிப் பகுதியை ஏறத்தாழ 200 ஆண்டுகாலம் ஆண்ட பிரெஞ்சுக் காலனித்துவத்தின் கீழ் புதுச்சேரி மக்கள் பட்ட பெரும்பாட்டைத்தான் படைப்பாக்கித் தந்துள்ளார். இந்த அளவிற்குப் பிரெஞ்சுக் காலனித்துவத்தின் கோரமுகத்தையும் தமிழ் நிலப்பரப்பிலும் பண்பாட்டுக் கூறுகளிலும் அது நிகழ்த்திக் காட்டிய மாற்றங்களையும் அவற்றால் பெருவாரித் தமிழ் மக்கள் அடைந்த வலிகளையும் வேதனைகளையும் இலக்கியமாக்கித் தந்தவர்கள் நாம் போற்றும் பிரபஞ்சனும் நம் போற்றுதலுக்குரிய நாகரத்தினம் கிருஷ்ணாவும்தான்; இதிலும் பிரபஞ்சனின் களம் காலனிக்குள்ளான புதுச்சேரி நிலப்பரப்பு மட்டும்தான்; ஆனால் கிருஷ்ணாவின் களம் பிரெஞ்சுக் காலனிக்கு ஆட்பட்ட பல்வேறு வகையான நிலப்பரப்பென விரிந்தது என்பதையும் குறித்துக் கொள்ள வேண்டும்.

 

கிழக்கிந்திய நாடுகளில் நடந்த ஐரோப்பியர்களின் காலனித்துவத்தைத் தமிழில் வேறு சிலரும் எழுதியுள்ளனர்தான்; ப.சிங்காரம் (கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோனி), அகிலன் (பால்மரக் காட்டினிலே), ஆர்.சண்முகம் (சயாம் மரண ரயில்), ரங்கசாமி (லங்கா நதிக்கரையில்), குமரன் (செம்மண்ணில் நீல மலர்கள்), இளம் வழுதி (இலட்சியப்பாதை); பாரதியாரின் ‘கரும்புத் தோட்டத்திலே’ என்ற கவிதையையும் புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி’ சிறுகதையையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்; ஆனால் நாகரத்தினம் கிருஷ்ணா போல் முழுக்க முழுக்கத் தன் நாவல் எழுத்துக்கள் அனைத்திலும் 17-ஆம் நூற்றாண்டு தொடங்கி 20ஆம் நூற்றாண்டு வரை பிரெஞ்சுக் காலனித்துவத்தால் புதுச்சேரி வாசிகள் வாழ்வில் நிகழ்ந்த பல்வேறு அசைவுகளைப் பல்வேறு கோணத்தில் நான் முன்பே சுட்டிக்காட்டியது போல பல்வேறு ‘களத்தில்’ வைத்துத் தமிழில் படைப்பிலக்கியம் செய்தவர்கள் வேறு யாருமில்லை. இதை எந்த அளவிற்கு இன்றைய புதுச்சேரி வாசிகளும் எழுத்தாளர்களும் உணர்ந்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

2. இறந்த காலம்

eranthakaalam_2 copy (1)

வரலாறு புனைவாகவும் புனைவு வரலாறாகவும் உணர்வுகளில் படர்ந்து தங்குகிறது. அவரது முதல் நாவலான நீலக்கடல் தொடங்கி இந்த ஆறாவது நாவல்வரை அனைத்திலும் பிரஞ்சுக் காலனித்துவத்தின் கொடூர முகத்தையும் , ஐரோப்பிய வாழ்க்கையின் போதாமையையும் புலப்படுத்துகிற ஒரு முறைமையிலேயே கதையாடுகிறார் ; அதுவும் காலனிக்கால எளிய மக்கள் மேல் அவர் கொண்டிருக்கும் பரிவும் கருணையும், அதற்காக எழுத்தில் செலுத்துகிற இந்தத்தொடர் உழைப்பும், கீழைத்தேய மரபிற்கு ஏற்பத் தானொரு அறநெறிப்பட்ட கதைசொல்லி  என்பதைச்  சொல்லிய வண்ணம் இருக்கின்றன.  இத்தகைய நாவல்களை இன்றைய பின்காலனித்துவக் கோட்பாட்டு நோக்கில்  அணுகி ஆராய்ந்து ஒரு இணைப்பிரதியை உருவாக்க க் கூடிய சாத்தியங்கள் நிறைய இருக்கின்றன. அதற்கேற்ப இவர் நாவல்களை இணைக்கும் ஹரிணி இந்த நாவலிலும் வருகிறார்.

கதை சொல்லலின் உடற்கூறை, அதன் இரத்த நாளங்களின் வெப்பத்தை எல்லாம் அறிந்துகொண்டு மொழிமேல் வினைபுரியும் அற்புதமான கதைசொல்லியாக விளங்குகிறார் ; நன்றாக முழுமையாக விளைவதற்கு முன்பே அறுவடை செய்துகொண்டு வந்து, செயற்கையாகப் பாடம் செய்து ஒன்றுகூட வீணாகாமல் விற்று, நல்ல காசு சம்பாதித்துவிட முடியுமென்கிற சந்தைச் சூழல், தமிழ் க்கலை இலக்கியத்துறையிலும் பரவி அனைத்தையும் நாசம் செய்துகொண்டிருக்கிற ஒரு நிலையில், இத்தகைய கதை சொல்லிகள் பெரிதும் கொண்டாடப்பட வேண்டுமென விழைகிறேன்.

கதைகட்டுவதற்கு இவர் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சிகளும், நிகழ்ச்சிகளை வளர்த்தெடுக்கும் கதைமாந்தர் தேர்வும், இவர்களை இணைக்கும் மொழியாடலும் ஒரு சிறிதும் பிசிறு இன்றிக் கச்சிதமாக வந்து விழுகின்றன.எனவே வாசிப்பு அனுபவம் எளிதாகக் கூடி வருகிறது; ஓர் எழுத்தின் வெற்றி என்பது இறுதியில் இதுதானே !  இந்த வெற்றித் தொடரட்டும்.

பேராசிரியர்         க. பஞ்சாங்கம்

சந்தியா பதிப்பகம், சென்னை.

 

3. ரணகளம் (2018)

26047505_1779219605441809_5161767557754892563_n

திகாரம், புகழ் எதுவாக இருப்பினும் உச்சத்தில் தடுமாறுகிறது, விழுந்துவிடாமலிருக்க எதையேனும் பற்றவேண்டிய நெருக்கடி. மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல், தருணங்களை ஏக்கங்களாகவும் நிராசைகளாவும் நிரப்பி தனிமையில் அழவும் பொதுவெளியில் சிரிக்கவும் விதிக்கப்பட்ட மனிதர்களின் பாசாங்கு வாழ்க்கை பற்றிய ஒரு விசாரணை.

ரணகளம் – நாவல்

சந்தியா பதிப்பகம், சென்னை.

4. காஃப்காவின் நாய்க்குட்டி ( 2015) 

Kafka Naykutti Wrapper 3-1நாம் ஒவ்வொருவருமே பொன் பொருள் புகழ்^தத்துவம் விடை என்று ஏதோ ஒன்றைத் துரத்தியபடி ஓடிக்கொண்டிருக்கிறோம். அவ்வோட்டத்தையே வாழ்வென நம்பவும் செய்கிறோம். அவ்விதமாகவே இந்நாவலின் மையப்பாத்திரங்களும் தாங்கள் அவாவுற்ற ஒன்றின்பொருட்டு அல்லலுற்று அலைகிறார்கள். அத்தேடலின் கதை புதுச்சேரியிலும் யாழ்ப்பாணத்திலும் தொடங்து பிரான்சில் வளர்ந்து செக் குடியரசில் முடிகிறது. தேடி அலைந்ததைக் கண்டடைந்தார்களா? அதற்காக அவர்கள் கொடுத்த விலையென்ன? அடைந்தக் கணத்தில் அவ்வாசைகளின் மதிப்பென்ன? என்பதான கேள்விகளுடன் கதை முடியுமிடத்திலிருந்து ஒரு வாசகன் தனக்குள் தேடத்தொடங்கினால் அதுவே இந்நாவலின் வெற்றி.

கா·பாகாவின் நாய்க்குட்டி
விலை 295ரூ
காலச்சுவடு பதிப்பகம்
நாகர்கோவில் -இந்தியா.

5. கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி (2013)

Na.krishna -New books3 001தமிழ்நாடு அரசின் சிறந்து வெளிநாட்டு தமிழ்ப் படைப்பிலக்கிய விருதைப் (2014) பெற்ற நாவல்

“இந்த நாவலில் நிகழ்ச்சிகளும் அவற்றை எடுத்துரைக்கும் முறையியலும் ஒன்றையொன்று போட்டிப் போட்டுக் கொண்டு உள்ளே நுழையும் வாசகர்களை வேகமாக இழுத்துச்செல்கின்றன. மண் புழுக்கள் பந்து போலத் திரண்டு கொள்வது இயல்பு. அதுபோல இந்த நாவலின் நிகழ்வுகள், செறிவாக உயிரோட்டம் மிகத் திரண்டு உருண்டு கிடக்கின்றன” – முனைவர்க. பஞ்சாங்கம்

“பல்வேறு கதைகளின் தொகுப்பாக விரியும் நாவல் வரலாறும் நடப்பும் எதிர்காலமும் கலந்து சொல்லப் பட்டிருப்பது பிரதிக்குப் புதிய அர்த்தம் தருகின்றது. மொழிநடையின் வழியே பழமைக்கு நெருக்கமாக வரலாற்றுக்குள் இட்டுச் செல்வது நாவலின் தனித்துவம்” – ந. முருகேசபாண்டியன்

Sandhya Publications
New N°77, 53rd Street, 9th Avenue, Ashok Nagar
Chennai 600 083
Ph.:044 24896979

6. மாத்தா ஹரி -நாவல்(2008)

கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை பரிசினை வென்ற நாவல்

“நாவலின் சொல்லாடலையும் தமிழ் நடையையும் குறிப்பிட வேண்டியது. பல இடங்களில் கவிதைச் செறிவாக, சுழன்று அடித்து ஓடும் நதியின் ஓட்டத்தைப்போல இருக்கிறது.  ஆழ்ந்த இலக்கியப் பயிற்சியும் பரந்துபட்ட வாழ்க்கை அநுபவமும், புற உலகத்தை உள்வாங்கிக்கொள்ள எப்போதும் விழித்திருக்கும் மனமும் இருந்தாலொழிய மாத்தா ஹரியை எழுத முடியாது” – கி. அ. சச்சிதானந்தம்

“பிரான்சு நாட்டில் வாழும் புதுச்சேரிக்காரர் திரு.நாகரத்தினம்கிருஷ்ணா அவர்களின் இந்த நாவல் – ‘மார்த்தாஹரி’ அந்தக் குறைபாடின்றி, வாசகனுக்கு நெருக்கமாய் நின்று, நிகழ்வுகளினூடே சுகமாகப் பயணம் செய்ய வைப்பதாய் இருக்கிறது.”வே.சபாநாயகம்

எனி இந்தியன் பதிப்பகம், சென்னை 600017 Pn.:04424329283

7. நீலக்கடல் – சரித்திர நாவல் (2005)

தமிழ்நாடு அரசின் சிறந்து வெளிநாட்டு தமிழ்ப் படைப்பிலக்கிய விருதைப் (2007 பெற்ற நாவல்

“இந்த நூற்றாண்டில் வெளிவந்துள்ள குறிப்பிடத்தக்க நாவலாக நான் அதனைக் கருதுவதற்கு முக்கிய காரணங்கள் இருக்கின்றன.நாகரத்தினம் கிருஷ்ணாவின் கதை தொடர்ந்து படிக்கக் கூடியதாக இருக்கின்ற காரணம் தமிழில் இதுவரை நாம் படித்திராத புதிய கதைக் களனில் புதிய செய்திகளை அவர் சொல்கிறார் என்பதுதான். கதை சுவையாகவும் சில மர்மங்களுடனும் பின்னப் பட்டுள்ளது. அதோடு பிரஞ்சு வாழ்க்கை மற்றும் பிரஞ்சு இலக்கியம் பற்றியும் இதற்கு முன் நாம் அறிந்திராத செய்திகளைக் கதையின் ஊடே சுவையாகச் சொல்லிச் செல்லுகிறார். – முனைவர்ரெ.கார்த்திகேசு

” நாகரத்தினம் கிருஷ்ணாவின் வரலாற்று பார்வை மிக விரிந்தது. ஆட்சியாளர்களின் காவல்முறை, பரம்பரை, காதல் என்று மட்டுமே நிலைபெற்றிருந்த வரலாற்று நாவல் தடத்தை மாற்றிப் போட முயற்சித்திருக்கிறார் ஆசிரியர். சாதாரண மக்கள் வியர்வையிலிருந்தும் ரத்தத்திலிருந்தும் இவர் கட்டியெழுப்பும் பாத்திரங்கள் விரிகின்றன. வாழ்க்கையின் பசிய வாசனை நாவல் முழுதும் வீசுகிறது.” -‘ பிரபஞ்சன்’

சந்தியா பதிப்பகம், சென்னை- 600083 Ph.044-24896979

8.  Bavâni, l’avatar de Mata HariLa couverture

 

9. Je vis dans le passé (Auroville)

 

சிறுகதைகள்

8. மகாசன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்Maga sannithanam wrapper-001-001

தமிழில் நீங்கள் வழக்கமாக சந்திக்கிற கதைக்களனில் சொல்லப்பட இல்லை அவற்றில் பலவற்றை இணைய இதழ்களிலும் காலசுவடிலும் படித்திருப்பீர்கள். அண்மையில் இவ்வலைத் தளத்தில் பிரசுரித்திருந்த ‘அவர்’ என்ற சிறுகதையும் இதில்அடக்கம். அண்மைக்காலமாக தமிழில் முதுகலை படிக்கிற, முடித்த மாணவர்களிடை நவீன தமிழ் இலக்கியம் குறித்த விழிப்புணர்வு வந்திருக்கிறதென்பதை எனக்கு வரும் ஒரு சில கடிதங்கள் நிரூபணம் செய்கின்றன. தமிழில் ஏற்பட்டுவரும் இம்மாற்றத்திற்கு பேராசிரியரும் படைப்பாளியுமாகிய தமிழவன் போன்றவர்களே காரணம் என்பதை இங்கே மறக்காமல் குறிப்பிடவேண்டும். இக்கதைகளை நவீன தமிழ் இலக்கியக்கியத்தில் அக்கறைகொண்டுள்ள இளம் தலைமுறையினருக்கு சமர்ப்பிக்கிறேன்.

நற்றிணை பதிப்பகம் (பி) லிட்.,

எண். 6/84, மல்லன் பொன்னப்பன் தெரு,
திருவல்லிக்கேணி,
சென்னை – 600005.
தொலைபேசி: 94861 77208, 94429 56725, 044 28482818

9. கனவுமெய்ப்படவேண்டும் –

முதல் சிறுகதைத் தொகுப்பு

விகடன், குமுதம், கல்கி, குங்குமம்போன்ற வெகுசன இதழ்கள், திண்ணை போன்ற இணைய இதழ்கள் சிற்றிதழ்கள் ஆகியவற்றில் பிரசுரமானவை

மணிமேகலை பிரசுரம், சென்னை 600017 Pn.:0444346082

 

10. நந்தகுமாரா நந்தகுமாரா -சிறுகதைகள்

சந்தியா பதிப்பகம், சென்னை-600 083
Ph.:04424896979

 

11. சன்னலொட்டி அமரும் குருவிகள் -சிறுகதைகள்

புதுமைப்பித்தன் பதிப்பகம், சென்னை-600 083 Ph.:04424896979

 

12.சிரிக்கும் ரொபோவையும் நம்பக்கூடாது – அறிவியல் புனைகதைகள்

உயிரெழுத்து பதிப்பகம், திருச்சி-620001 Ph.:04316523099

 

 

 கட்டுரைகள்

13thathuvathin. தத்துவத்தின் சித்திர வடிவம்
அல்பெர் காம்யூவையும், •பூக்கோவையும் தெரிந்துகொள்வது தேவைதான், ஆனால் அது கட்டாயமுமல்ல. இளைஞர்களைத் தயார்படுத்த இன்றைக்கு என்ன நடக்கிறது என்கிற புரிதல் முக்கியம். பிற துறைகளைப்போலவே சமகாலப் பார்வை இலக்கியத்திற்கும் அவசியமென நினைக்கிறேன். “அண்டைவீட்டுக்காரனின் தகப்பன், பாட்டன் பெருமைகளை காட்டிலும், அவனுடையசொந்த சாதனையை, இன்றையை வளர்ச்சியைப் புரிந்துகொள்வதிலேயே என்னுடைய வளர்ச்சியிருக்கிறது” என நம்பும் பலரில் நானும் ஒருவன். உலக இலக்கியங்களில் தற்போது என்ன நடக்கிறதென்ற ஒப்பீடு மட்டுமே நவீனத் தமிழ் இலக்கியத்தை வளர்த்தெடுக்க உதவுமென்பது எனது நம்பிக்கை. அதன் அடிப்படையில் எழுதப்பட்டதே இத்தொகுப்பிலுள்ள

கட்டுரைகள்.
தத்துவத்தின் சித்திரவடிவம்
விலை ரூ 90
காலச்சுவடு பதிப்பகம்
669 கே.பி.சாலை
நாகர்கோவில் -629001

14. காஃப்காவின் பிராஹா – பயணக்கட்டுரைகள்Kafkavin praga wrapper-001-001:

மேற்கு ஐரோப்பாவில் பார்த்த நகரங்களைக் காட்டிலும், பார்க்காத நகரங்களைச் சொல்லிவிடலாம் அவை எண்ணிக்கையில் குறைவு.வட அமெரிக்காவிலும் மகள் லாஸ் ஏன்ஜெலெஸ் -சியாட்டல் என குடியேற அருகிலுள்ள நகரங்களைப்பார்க்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகம் சென்றதில்லை முதன் முதலாக செக் குடியரசைச் சேர்ந்த பிராஹா நகரைப் பார்க்குவாய்ப்புக் கிடைத்தது. காஃப்காவிற்கும் மிலென் குந்தெராவிற்கும் சொந்தமான நகரம் என்பதால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நகரம். எல்லா நகரங்களையும் பற்றி எழுத நினைத்ததில்லை. சில இடங்களைப்பற்றி எழுதவில்லையே என வருந்தியதுண்டு குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்றிருந்த ரோம், வெனிஸ், மிலான் ஜூரிச், லாஸ்வெகாஸ், சான் பிரான்சிஸ்கோ மதுரா, ரிஷிகேஸ் ஆகியவைகளைப் பற்றியும் அண்மையிற் சென்ற வான்கூவர் குறித்தும் எழுத நிறைய இருக்கின்றன. இத்தொகுப்பின் தலைப்பு சொல்வதுபோல பிராஹா பற்றியும், துருக்கிக்குச் சென்ற ஒரு வார பயணமும் -ஸ்பெயின் பார்சலோனா குறித்த கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. பயணத்தை மிகசுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறேன்.

15. பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன் –

பிரெஞ்சு படைப்பிலக்கியத்தில் தனிக்கவனம்பெற்ற  பதினைந்து படைப்பாளிகள் பற்றிய கட்டுரைகள்.  லாமர்த்தின், பொதுலேர்,எமே செசேர், பஸ்க்கால் கிஞ்ஞார்..

சந்தியா பதிப்பகம், சென்னை 600 083 Ph.:04424896979

 

16. சிமொன் தெ பொவ்வார் -கட்டுரைகள்

இருபதாம் நூற்றாண்டின் மிகமுக்கியமான ஒரு திருப்புமுனையாய் அமைந்த சிமொன் தெ பொவ்வாரின் வாழ்க்கைநெறி பற்றிய கட்டுரைகளும் பெண்களுக்கான வேதநூல் என சித்தரிக்கபடும் அவரது இரண்டாம் பாலினத்தின் சுருக்கமும் அடங்கியது.

எனி இந்தியன் பதிப்பகம், சென்னை 600 017

17. எழுத்தின் தேடுதல்வேட்டை -கட்டுரைகள்

சிந்தனைகுடத்தில் மானுடத்தேடல் தளும்ப அலைந்த படைப்பிலக்கியவாதிகள் பன்னிருவரைப்பற்றிய கட்டுரைகள்

சந்தியா பதிப்பகம், சென்னை 600083

 

18. மொழிவது சுகம்

அரசியல், சமூகம் செய்திகள் Na.krishna -New books 001மற்றும் பிரச்சினகளைவைத்து யுமாயினி இதழில் வெளி வந்த கட்டுரைகளின் தொகுப்பு

அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை -60011
தொலைபேசி எண் 25582552

19. அல்பெர் காம்யு மரணத்தில் மர்மம்(2014)

அம்ருதா இதழில் வெளிவந்த பத்திகளின் தொகுப்பு. கலை, இலக்கியம் மற்றும் பொதுவகைக் கட்டுரைகள்.

Amrutha Pathippagam
N°5, 5th Street, S.S. Avenue
Sakthi Nagar, Porur, Chennai 600116
Ph:22522277

20. கதையல்ல வரலாறு

Na.krishna -New booksவரலாறென்பது  கடந்தகால உண்மை நிகழ்வுகள் வரலாற்றாசிரியர்கள் அரிச்சந்திரர்களாக இருக்கக் கடமைப்பட்டவர்கள். ஆனால் அவ்வாறு இருக்கிறார்களா? வரலாறு என்று எழுதப்பட்டதெல்லாம் உண்மைகளா? இதுபோன்ற கேள்விகளை  இத்தொகுப்பு எழுப்புவதோடு மட்டும் அல்லாமல் உலகசரித்திரத்தின் சில முக்கியமான நிகழ்வுகளை மறு ஆய்வும் செய்கிறது.

கதையல்ல வரலாறு
விலை ரூபாய் 80
நற்றிணை பதிப்பகம்
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை
சென்னை -5

21. இலங்கு நூல் செயவலர்- முனைவர் க. பஞ்சாங்கம்ilangu

மூத்த தமிழ் அறிஞர்களில் ஒருவரும், தேர்ந்த திறனாய்வாளருமான க. பஞ்சாங்கத்தின் திறனாய்வு திறனை விளங்கிக் கொள்ளும் முயற்சி

இலங்குநூல்செயவலர்

விலை100

அகரம் பதிப்பகம்

தஞ்சாவூர் 613007, தொலைபேசி 04362-239289

 

       மொழிபெயர்ப்புகள்

22. De haute lutte – Ambai

 அம்பை சிறுகதைகள் பிரெஞ்சில் ஒரு பிரெஞ்சு பெண்மணியோடு சேர்ந்து செய்தது.Ambai li

De haute lutte –Ambai – Diffusion Seuil – 18€
Nouvelles traduites du tamoul par Dominique Vitalyo et Krishna Nagarathinam
Editions ZULMA
18, rue du Dragon
Paris 6ème

23. புரட்சியாளன் (l’homme révolté)

puratchiyalanபுகழ்பெற்ற  ஃபெரெஞ்சு எழுத்தாளர் அல்பெர் கமுய் (Albert Camus) புரட்சி குறித்த ஆய்வு நூல். புரட்சி பண்பை வரலாற்றின் துணைகொண்டு விசாரணை செய்திருக்கிறார்.

“தனித்து ஒதுங்கியிருந்த குற்றம் இன்றைக்கு அறிவியல்போல உலகளாவியதாக இருக்கிறது . நேற்றுவரை தண்டனைக்கு ஆளானக் குற்றம் இன்றைக்குத் தண்டனைகுரிய சட்டத்தை வகுக்கிறது”. “திரும்பும் திசைதோறும் கொலைச்செயல்மட்டுமே நீக்கமற நிறைந்திருக்கிறது” என்று நாசூக்காகப் புலம்பிக்கொண்டே பிறர் செய்யும் கொலைக்கு உடன்படும் நிலைக்கு அனைவரும் தள்ளப்பட்டுள்ளோம்.” இப்படியானதொரு கொடூரமான சூழலில் அல்பெர் கமுய் யினுடைய புரட்சியாளன் நேரடியாக ஃபிரெஞ்சுமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு வருவது, விளங்காத பிறவியாய் நெறிகெட்டுகிடக்கும் நம் இருப்]பை புதிய கோணத்தில் நுட்பமாகப் புரிந்துகொள்ள ப் பேருதவியாய் இருக்கும்

 நூலின் முன்னுரையில் பேராசிரியர் க.பஞ்சாங்கம்

புரட்சியாளன்- அல்பெர் கமுய்

பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா

விலை 475 ரூபாய்

காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்

தமிழ்நாடு, இந்திடா

24  குற்ற விசாரணை -லெ.கிளேசியொ

குற்ற விசாரணைமன ஊனமுற்ற சராசரி மேற்கத்திய இளைஞனொருவனுடைய அகவெளிக்கதவு முதன்முறையாக விரியத் திறக்கபடுகிறது. முதல் மனிதனென்று கற்பிதம் செய்யப்பட்ட ‘ஆதாம்’ பெயரை கதைநாயகனுக்கு ஆசிரியர் தேர்வு செய்திருப்பது தற்செயல் அல்ல. கதை நாயகன் நம்முள் உறங்கிகொண்டிருக்கும் ஆசாமி. நம்மிடம் முடிவுற்ற பதில்களும் ஆதாம் போன்ற சித்தர்களிடம் முடிவுறாக் கேள்விகளும் இருக்கின்றன. கிளேசியோ அதனை இலக்கிய மொழியில் பதிவுசெய்திருக்கிறார்.

 

 

25. போர் அறிவித்தாகிவிட்டது -நவீன பிரெஞ்சு சிறுகதைகள்
சந்தியா பதிப்பகம், சென்னை 600083

 

 

 

26. காதலன்- நாவல்
மார்க்கெரித் துராஸ்
தென்திசைபதிப்பகம், சென்னை-600 017

 

 

27. வணக்கம் துயரமே -நாவல்
பிரான்சுவாஸ் சகான்
காலச்சுவடு பதிப்பகம் -நாகர்கோவில் 629001

 

28. உலகங்கள் விற்பனைக்கு – அதிர்வுக்கதைகள்

ulagangal final1மேற்கத்திய உலகில் Sudden Fiction என்றொரு வகையுண்டு. பின்னர் கவிதைகளிலும் அது எதிரொலித்தது. முடிவு எதிர்பாராததாக இருப்பது அதன் பிரத்தியேக சிறப்பு. வாசிக்கையில் சில அதிர்வுகளை வித்தியாசமாக உணர்ந்தேன். இத்தொகுப்பில் பதினோறு கதைகள் உள்ளன. இவற்றுள் ஒரு நூற்றாண்டுக்கு முன்புவாழ்ந்து மறைந்த இலக்கியவாதிகளின் படைப்புமுண்டு; இன்றூ வாழ்ந்து கொண்டிருக்கிற இலக்கியவாதிகளின் படைப்புமுண்டு. தலையில் கிரீடமும் ஒளிவட்டமும் அலங்கரிக்க பவனிவந்த வருகிற படைப்பாளிகளின் எழுத்துக்களுமுண்டு, கவனிப்பாரற்ற வேரில் பழுத்த பலாவுமுண்டு; ஒரு பக்க நாவலுமுண்டு, ஒன்பது பக்கங்களில் சொல்லப்பட்ட சிறுகதையுமுண்டு; பழமையுமுண்டு புதுமையுமுண்டு, கதை தரும் அதிர்வுகள் பொதுப்பொருள்.

வெளியீடு:
உலகங்கள் விற்பனைக்கு- அதிர்வுக் கதைகள்
விலை ரூ.90
சந்தியா பதிப்பகம்
அசோக் நகர், சென்னை 600 083
தொலைபேசி 044-24896979

29. உயிர்க்கொல்லி – மொழிபெயர்ப்பு சிறுகதைகள்

UYIRKKOLLIபிரெஞ்சு மொழியின் செவ்வியல் கதைகளை மட்டுமே வாசித்து ப் பழக்கப்பட்டிருக்கும் தமிழிலக்கிய வாசகர்களுக்கு இந்த நவீனக் கதைகள் புதிய அறைகூவலை முன் வைக்கின்றன. மனித மனத்தின் நவீன சிடுக்குகளை இரக்கமின்றி வெளிப்படுத்துகின்றன எல்லா கதைகளும் இலக்கிய வாசிப்பு சுகம் மட்டுமல்ல; அமைதியைக்குலைக்கும் புனிதச் சடங்கு என்பதை நிறுவும் தொகுப்பு இது.

 

உயிர்க்கொல்லி -பிரெஞ்சு சிறுகதைகள்
காலச்சுவடு பதிப்பகம்
669 -கே பி.சாலை, நாகர்கோவில் 629001

——-
30. மார்க்ஸின் கொடுங்கனவுMarx
– தனியுடமையென்பது தொடர்கதையா?
மார்க்ஸியச் சித்தாந்தத்தைப் பழுதறக் கற்றுத் தேர்ந்தவ்ரும் தத்துவ பேராசிரியருமான டெனிஸ்கொலன் பிரெஞ்சு நூலின் தமிழாக்கம். கார்ல் மார்க்ஸ் கட்டமைத்திருக்கும் மார்க்ஸிய சித்தாந்தத்தைப் பழமைவாதிகளிடமிருந்து விடுவித்து நவீனக் காலத்திற்கு ஏற்ர விதத்தில் அதில் மாற்ரங்களைக் கொண்டு வருவதில் பெரும்பிடிப்புள்ள இவரது கட்டுரைகள் மார்க்ஸியம் பற்றிய மற்றொரு பரிமானத்தைத் துலக்கமாக்குகிறது.

மார்க்ஸின் கொடுங்கனவு
தனியுடமையென்பது தொடர்கதையா?
விலை ரூ200
காலச்சுவடு பதிப்பகம்
669 -கே பி.சாலை, நாகர்கோவில் 629001

31. அதிபர் வந்த தினம்

மொழிபெயர்ப்பு சிறுகதைகள்

அதிபர் வந்த தினம்.

வெளியீடு:

பிரதிலிபி

https://tamil.pratilipi.com/story

———————————————————————-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s